24 special

இந்தியா கூட்டணி கிடக்குது...! மும்பைக்கு செல்லாமல் உதயநிதி இருந்த பின்னணி...!

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் என் டி ஏ எனப்படும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது. கிட்டத்தட்ட பத்தாவது ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சியைப் புரிந்து கொண்டிருக்கின்ற வேலையில் மறுபடியும் மூன்றாவது முறையாக பாஜகவை வெல்ல விடக்கூடாது என்பதற்காக நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கிட்டத்தட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து அதற்கு இந்தியா என்றும் பெயரிட்டுள்ளது! 


தற்போது இந்த கூட்டணி மூன்று மாநாடுகளை நடத்தி உள்ளது கடைசியாக நடைபெற்ற மூன்றாவது மாநாடு மும்பையில் இரண்டு தினங்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவு இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து இந்த தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இந்த தேர்தலில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் கிளம்பும்போது அவருடன் உதயநிதி ஸ்டாலின் அங்கு செல்லாமல் தனது கட்சி பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். 

அதாவது,  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்த பொழுது நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டை விட பிரமாண்டமாக தற்போது திமுகவின் இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் பொழுது நடத்த திமுக முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் இந்த மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது என்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் சேலத்தில் நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பொறுப்பாளராக கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். 

2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இந்த மாநாடு வெற்றி அடைய வேண்டும், அதற்காக நம் இளைஞர் செயல்வீரர்கள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்த உதயநிதி, மாநாட்டிற்காக வசூலிக்கப்படும் நிதி பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது மாநாட்டு நிதி இப்பொழுது அறிவிக்க போவதில்லை மாநாட்டில் பந்தலிலே தான் அறிவிப்பேன் என்று நேரு கூறியதாக உதயநிதி கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி முதல்வர் ஸ்டாலின் மும்பையில் 2024 தேர்தலை மையப்படுத்தி முகாமிட்ட வேளையில் அங்கு செல்லாமல் உதயநிதி இங்கிருந்தது விமர்சனங்களை எழுப்பியது. 

இதன் பின்னணியை விசாரித்தபோது 'தேசிய கூட்டணியாவது மண்ணாவது இங்கிருக்கும் நிலைமையே நம்மால் காலூன்று நிற்க முடியவில்லை இதில் அங்கு வந்து என்ன செய்வது இங்கு இருக்கும் இடத்தை நான் உறுதிப்படுத்திக் கொள்கிறேன் என்று உதயநிதி மும்பைக்கு செல்லாமல் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள தனது இளைஞரணி மாநாட்டை பெரிதும் நம்பி அதற்கான நிதி வசூலிப்பதில் இறங்கியுள்ளார் என்று அறிவாலய வட்டாரங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதோடு இந்த மாநாடு தான் தேர்தலுக்கு நமக்கு அச்சாரமாக இருக்கும், இந்த மாநாட்டில் நாம் கூட்டும் கூட்டம் தான் தேர்தலுக்கு நமக்கு வாக்குகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவே இந்த மாநாட்டை கண்ணும் கருத்துமாக பார்த்து வர வேண்டும் இந்தியா கூட்டணி எப்படி சென்றால் நமக்கு என்ன நமக்கு மாநாடு தான் முக்கியம் என்று உதயநிதி தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக சில அறிவாலய தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருவேளை இந்தியா கூட்டணியே பிரச்சனைகளால் உடைந்தாலும் தமிழகத்தில் இருக்கும் சில தொகுதிகளையாவது நாம் கைப்பற்ற வேண்டும் அதற்காக இந்த மாநாடு முக்கியம் என்று உதயநிதி கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.