24 special

அடித்து சொன்ன ஆர்எஸ்எஸ்....! எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்க களமிறங்கும் மிகப்பெரிய திட்டம்.....!

pm modi, rogulganthi,
pm modi, rogulganthi,

மத்தியில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமையக்கூடாது என்பதற்காக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, சிவனேசா உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியில் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த கூட்டணியின் மாநாட்டில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தொகுதிகளை பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை இந்த கூட்டணி முடிவு செய்து நியமித்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த மாநாட்டில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்த செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. 


அதாவது இந்த கூட்டணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும்,  இந்தியாவில் இருக்கும் அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை தவிர ஒன்றாக இணைந்துள்ளது பலம் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் செல்வாக்கிற்கு இணையான ஒரு பிரதமர் வேட்பாளரை நியமிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது பலவீனமாகவும் இந்த கூட்டணியில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பாஜகவை எதிர்ப்பதற்காக கூடியுள்ள இந்தியா கூட்டணியில் இந்துமத ஆச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் இல்லாத கட்சிகளே ஒன்றிணைந்துள்ளது என வலதுசாரிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.மேலும் இந்த கூட்டணியில் இணைந்துள்ள சிவசேனா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் இந்த தேர்தலை மையப்படுத்தி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மகாராஷ்டிரா மாநிலத்தில் தைனிக் தருண் பாரத் என்ற நாளிதழை நடத்தி வருகின்ற ஸ்ரீ நர்கேசரி பிரகாசன் நிறுவனத்தின் புதிய கட்டிடமாக மதுகர் பவன் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதோடு இந்த திறப்பு விழாவின் பொழுது உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தியா என்பது இந்து தேசம் அதுவே உண்மையான கூற்று இந்துக்கள் என்றாலே அனைத்து இந்தியர்களை குறிக்கும் ஒரு சொல்லாகவே கருதப்படுகிறது. இவை அனைவருக்கும் தெரிந்த ஒரு சிலருக்கு அது புரிகிறது சிலர் அதை புரிந்தாலும் புரியாதது போன்று நடந்து வருகிறார்கள், அது மட்டுமல்லாமல் சிலருக்கு அது புரிவதே இல்லை! இந்தியாவில் தற்போது இருக்கும் இந்து கலாச்சாரம் இந்து முன்னோர்கள் இந்து நிலத்துக்கு சம்பந்தப்பட்ட உரியவர்களே தவிர அதனைத் தாண்டி வேறு எதுவும் கிடையாது என்று தெரிவித்தார். 

இதன் பின்னணியை விசாரித்த பொழுது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு இந்தியா கூட்டணியில் இருந்து பலத்தை எதிர்ப்புகள் வரும், அப்படி எதிர்ப்புகள் வரும் பொழுது இந்தியா கூட்டணிக்கு இந்துக்களால் கிடைக்கும் ஓட்டுகள் அனைத்தையும் சிதறடிக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க ஆர் எஸ் எஸ் மிகப்பெரிய திட்டம் வைத்திருப்பதாகவும் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த பேச்சு எனவும் சில அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அதோடு இந்தியா கூட்டணி தனது பலமாக கருதிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை இது சற்று ஆட்டத்தை காண வைக்கும் எனவும் அவர்களின் பலவீனத்தை இது மேலும் பலவீனப்படுத்தும் என்றும் பேசப்படுகிறது. இந்த தேர்தல் கண்டிப்பாக இந்து தர்மத்தை ஆதரிப்போர், இந்து தர்மம் காப்பாற்றப்படவேண்டும் என நினைப்போர் அதற்க்கு எதிர்மறையாக பேசுவோர் என இரு அணிகளாக கருத்துப்போர் போன்றுதான் நடக்கும்...! இப்படி கருத்தியல் ரீதியாக நடப்பதுதான் நமக்கு பலம் என ஆர்.எஸ்.எஸ் முன்பைவிட வேகமாக களமாடும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.