24 special

புதிய கவசத்தை உலகிற்கு அறிவித்தது இந்தியா. ... இனி எதுவுமே தேவையில்லை. ... கெத்து காட்டியது கர்ணன் கவசம்!

indian militry
indian militry

இரு நாடுகளுக்கு இடையே போர் என்ற ஒன்று வந்தால் தான் ஒரு நாட்டின் இராணுவ வளர்ச்சி என்ன என்பது தெளிவாக வெளி உலகிற்கு தெரிய வரும் அந்த வகையில் இந்தியா அறிவித்துள்ள புதிய ஆயுதம் எந்த வித வெடி பொருள்களும் இல்லாமல் சுக்கு நூறாக உடைக்கும் வித்தையை கொண்டு இருக்கிறது. 



பாகிஸ்தானின் ஹைட்ராஜெட்டிக் ட்ரோன்கள், சீனாவின் ஆட்டோமெட் ட்ரோன்கள் போன்றவை இந்திய எல்லையில் தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வந்த நிலையில், அதற்கு தீர்வாக பார்கவஸ்த்ரா ட்ரோன் எதிர்ப்பு ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த ஆயுதத்தை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ தான் உருவாக்கியுள்ளது. பார்கவஸ்த்ரா என்னும் இந்த ஆயுதம், கண்ணுக்கு தெரியாத லேசர் கதிர்வீச்சு மூலம் ட்ரோன்களை ஒரே நொடியில் அழிக்க வல்லமை படைத்தது. இதில் வெடிபொருள்கள் எதுவும் இடம்பெறுவதில்லை. வெறும் கதிர்வீச்சு தான் பயன்படுகிறது. அதனால் சத்தமோ, புகையோ, அதிர்வோ இல்லாமல் எதிரியின் ட்ரோன்கள் தரையிறங்கும்.


பொதுவாக ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வது எந்த நாட்டிற்கும் சிக்கலாகவே இருக்கிறது. ஏனெனில், ட்ரோன்கள் குறைந்த உயரத்தில் பறக்கும், சிறிய வடிவமைப்பில் இருக்கும் என்பதால் அவற்றை எதிர்கொள்ள வழிகள் குறைவாகவே இருக்கின்றன. ஆனால் பார்கவஸ்த்ரா அந்த குறைபாட்டை முற்றிலும் பூர்த்தி செய்துள்ளது. இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு இது ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது.  


மிகுந்த கவனிப்போடு  செயல்படும் இந்த ஆயுதம், ஒரு ட்ரோனின் இயக்க மையத்தை கண்முன்னே உறு தெரியாமல் அழிக்கிறது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் கடந்த சில மாதங்களில் இந்திய எல்லையில் பல்வேறு ட்ரோன்களை அனுப்பி உளவு பார்த்துள்ளன. இவை எல்லாவற்றையும் பறக்கும் நிலையிலேயே பார்கவஸ்த்ரா லேசர் கதிர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன என ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தொழில்நுட்பம் தற்போது டெல்லி, பஞ்சாப், ஜம்மு எல்லைப் பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. எதிர்காலத்தில் அனைத்து முக்கிய விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களில் இதை நிலைநாட்டும் வேலைகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


வெறும் மின்சாரம் மூலம் இயங்கும் இந்த ஆயுதம், பாரம்பரிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றை விட மிக குறைந்த செலவில் பாதுகாப்பை வழங்குகிறது. ட்ரோன்களை எதிர்க்கும் நவீன ஆயுதங்களின் பட்டியலில் பார்கவஸ்த்ரா உலகில் முன்னணியில் இருப்பதாகவே பாதுகாப்பு வட்டாரங்கள் பெருமிதம் தெரிவிக்கின்றன.


இந்தியாவின் பாதுகாப்பு துறையில் இது ஒரு முக்கியமான முன்னேற்றம் எனவும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.