24 special

காலையிலேயே இந்திய இராணுவம் அதிகார பூர்வமாக சொன்ன விஷயம். ...! அடி தூள் இது தான் தும்சம் செய்ததா அப்படி போடு!

indian militry
indian militry

பாகிஸ்தான் உடனான ஆபரேஷன் சிந்தூர் விஷயத்தில் இந்தியா முழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் வெளிநாட்டை சேர்ந்த சில ஊடகங்களும் இந்தியாவில் உள்ள சில நபர்களும் பாகிஸ்தான் கூறிய கருத்தை ஆதரித்து வந்தனர் இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று இந்தியாவின் வெற்றியை கேள்வி கேட்டனர்.  இந்த சூழலில் தான் எந்த ஊடகங்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி கேள்வி எழுப்பியதோ அந்த ஊடகங்களே தற்போது செயற்கைக்கோள் காட்சிகள் மூலம் பலத்த சேதாரம் பாகிஸ்தானிற்கு உண்டாகி இருக்கிறது. 


இந்தியாவில் எந்த ஆபத்தும் இல்லை என கூறும் அளவிற்கு உண்மை வெளிவந்து பாகிஸ்தான் முகத்திலும் பாக்கிஸ்தானிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தவர்கள் முகத்திலும் கரியை பூசி இருக்கிறது. 

இவை ஒரு புறம் என்றால் இந்தியா பாகிஸ்தான் போரில் ரஷ்ய தயாரிப்பு S 400 பயன்படுத்த பட்டதாக பலர் கூறிய நிலையில் உலகம் வியக்கும் வண்ணம் ஒரு அறிவிப்பை இந்தியா கொடுத்து இருக்கிறது அது தான் அகஸ்திர் தடுப்பு கவசம்.  


அகஸ்திர் என்பது “Automated Air Defence Control and Reporting System”  இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ உருவாக்கிய இந்த திட்டம், விமானப்படை மற்றும் தரைப்படை இரண்டிற்குமான பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான அமைப்பாக உள்ளது.

அதிக திறன்கள் மற்றும் நவீன வசதிகள்

அகஸ்திர் அமைப்பு மூலமாக இந்தியாவின் வான்வழி முழுவதும் ராடார் கண்காணிப்பு பிணையம் அமைக்கப்பட்டுள்ளது.

வானில் எதிரியின் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் வருவதை கண்காணிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

எந்த நேரத்திலும் அதிரடி நடவடிக்கை எடுக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும்.

எதிரியின் தாக்குதலை உணர்ந்து உடனடி எதிர்வினை அளிக்கிறது.

பல விமானங்களை ஒரே நேரத்தில் இடம் மற்றும் தூரம் பொருத்தமாக கண்காணிக்கிறது.

தானியங்கி கட்டுப்பாட்டு மையம் மூலம் விமானப்படை, தரைப்படை மற்றும் கடற்படை வரை இணைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த அகஸ்திர் மூன்று நிலைகளில் பாதுகாப்பை தருகிறது.

1. அருகிலிருந்து வரும் ஆபத்துகளை தடுக்கிறது.

2. நடுத்தர தூரத்தில் வரும் தாக்குதல்களை கண்டறிகிறது.

3. தொலைவில் இருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் திறன் பெற்றது.

பாகிஸ்தான் தாக்கும் போது, இந்திய விமானங்கள் பாதுகாப்பாக வேலை முடிக்க உதவியது இந்த அகஸ்திர் அமைப்பே. பாகிஸ்தானின் ஏவுகணைகள் இந்திய எல்லையை கடந்தே செல்ல முடியவில்லை.

இந்தியாவின் எல்லை முழுவதும் இந்த பாதுகாப்பு அமைப்பு செயல்படுகிறது. இந்தியா இதை தானாகவே உருவாக்கியுள்ளது. இதற்காக வெளிநாடுகளிடம் கை பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் உலக நாடுகளே இந்தியாவைப் பார்த்து வியக்கின்றன.இந்த வெற்றி இந்தியா பாதுகாப்பு துறையில் எடுத்த மிக பெரிய முன்னேற்றம் என்றே கூறப்படுகிறது.


உலகமே வியக்கும் வண்ணம் இந்தியா மிக பெரிய சாதனையை சொந்த தயாரிப்பு மூலம் நிகழ்த்தி காட்டி இருப்பது அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு பெரும் பின்னடவை கொடுத்து இருப்பது தெளிவாக உலகிற்கு தெரிந்து இருக்கிறது. 

மேலும் இப்போது இந்தியாவின் பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் கண்ட அமைப்புகளை வாங்க பல மூன்றாம் நிலை இராணுவ பயன்பாடிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள் முன் வந்து போட்டி போட்டு வருகின்றனர்.