இந்தியா : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கத்தோடு கருத்துக்களை கூறியிருந்தது. அதற்கு இந்திய தரப்பில் நேற்று தக்கபதிலடி கொடுக்கப்பட்டது.
USCIRF எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. "விமர்சனக்குரல்கள் அதிலும் குறிப்பாக சிறுபான்மை மதத்தினர் மற்றும் இந்தியாவில் அவர்களுக்காக போராடுபவர்கள் அவர்களுக்காக புகாரளிப்பவர்கள் மற்றும் வாதாடுபவர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது" என குற்றம்சாட்டி கூறியிருந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று இந்தியா அதன் கருத்துக்கு பலத்த எதிர்வினையாற்றியது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்க்ஷி இதுகுறித்து கூறுகையில் "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவின் மீது ஒருதலைப்பட்சமாக கருத்துக்கூறியதை அறிந்தோம்.
அதன் தவறான கருத்துக்களை அறிந்துகொண்டோம். சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கள் இந்தியாவின் கட்டமைப்பு அதன் அரசியல் அமைப்பு மற்றும் பன்முகத்தன்மை மற்றும் இந்திய ஜனநாயகத்தின் நெறிமுறைகளை பற்றிய மோசமான புரிதலின்மையை அது பிரதிபலித்துள்ளது.
துரதிர்ஷ்டாவசமாக வருந்ததக்கவகையில் USCIRF அதன் ஒவ்வொரு அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் தவறாக சித்தரித்தே வருகிறது. USCIRFன் நடவடிக்கைகள் அதன்மீதுள்ள நம்பிக்கை குறித்த கவலையை வலுப்படுத்துகிறது" என அரிந்தம் பாக்க்ஷி கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவின் இதுபோன்ற அமைப்புகள் தான் குறிப்பிட்ட சிறுபான்மையினரை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியது குறிப்பிடத்தக்கது.