
தமிழக அரசியல் போல் உலக அரசியலும் தற்போது அனல்பறக்க தொடங்கியுள்ளது. சீனா,பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளின் தலைவர்கள் மாற்றப்படும் என்று செய்திகள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. உலகமே திரும்பி பார்த்த விஷயம் என்றால் அது சீன அதிபர் குறித்து தான் : சீன அதிபராக இருப்பவர் ஜீ ஜின்பிங் இவரை கடந்த 25 நாட்களாக உலகமே தேடிவந்தது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வரை இவரை காணவில்லை, அவருக்கு என்ன ஆனது என விவாதங்கள் கிளம்பியது. ஒருவேளை உடல்நலன் சரியில்லையா? சீன அதிபர் மாளிகையில் தான் இருந்தாரா? இல்லை சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஜீ ஜின்பிங் வீட்டுச்சிறையில் இருந்தாரா?முதலில் சீனாவில் தான் இருந்தாரா என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் சீனாவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணிகள் சீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளளது.
இந்த நிலையில் தான் காணாமல் போன சீன அதிபர் மீண்டும் உலகின் முன்னர் தோன்றிவிட்டார், பிஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் ஜீ ஜின்பிங் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியிருக்கின்றார் ஜீ ஜின்பிங். இது உலக நாடுகளிடையே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது. இந்தியாவும் சீனாவும் தான் வளர்ந்து வருடம் நாடுகள் முதலில் யார் வல்லரசு ஆவது என்ற போட்டியில் உள்ளன.இந்த போட்டியை வல்லரசு நாடுகள் அவர்களுக்கு சாதகமாக்கி இரு நாடுகளுக்கும் பிரச்சனையை தூண்டிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை நீண்ட காலத்துக்கு பின் அவர் சீன அதிபர் சந்தித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. சீனா சென்றிருக்கும் ரஷ்ய தூதரை கூட அவர் சந்திக்காமல் முந்தி கொண்டு ஜெய்சங்கரை சந்தித்திருப்பது தான் இங்கு பார்க்கவேண்டிய விஷயம் இந்தியா சீன சந்திப்பு உலக நாடுகள் இடையே பெரும் குழப்பத்தையும் கிளப்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்னும் முடக்கபடவில்லை, இன்னும் சிறைவைக்கபடவில்லை என்பதை உலகுக்கு சொல்லியுள்ளார்.
எல்லை பிரச்சனை நிலவி வந்த நிலையில் தற்போது இரு நாட்டு உறவு மெல்லச் சீராகி வரும் நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது சீனா சென்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். மேலும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. சமீபத்தில், தைவானை சுற்றி சீனா போர் ஒத்திகைகளை நடத்தியது மற்றும் தைவான் தனது இறையாண்மையை காக்க தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளது.அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக உள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே மோதலை அதிகரிக்க வழிவகுத்து வருகிறது.
இந்தநிலையில் தான் இந்தியா சீனா சந்திப்பு அமெரிக்கவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தியாவும் தைவானும் நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு பெருமளவில் சீனாவை நம்பி இருந்தது . ஆனால் இந்தியா சீனா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி இறக்குமதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் தைவானுடன் கூட்டு சேர்ந்தது இந்தியா. உலகில் பயன்படுத்தப்படும் 70% செமி கண்டக்டர்கள் அங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகளில் பயன்படுத்தக்கூடிய நவீன சிப்புகளில் 90 சதவீதம் தைவான் நாட்டில் தான் உற்பத்தியாகின்றன. இந்த நிலையில் தைவான் அரசு இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தி தங்களுடைய பொருட்களை இந்தியாவில் தயாரிக்க முன் வந்துள்ளது.இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 17ஆவது பெரிய வர்த்தக கூட்டாளியாக தைவான் இருந்து வருகிறது. இந்தியாவில் தைவான் நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சீனா தைவான் பிரச்சனையை தீர்த்துவைக்கும் நடவடிக்கையில் சைலண்ட்டாக இறங்கியுள்ளது இந்தியா. இது தான் உலக நாடுகள் அதிர்ச்சியில் இருக்கிறது.