24 special

ஓய்வு பெறுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? நெருக்கடி தருகிறதா சின்னவர் பேமிலி ...குடும்பத்தில் நடப்பது என்ன? பாஜகவின் முக்கிய மூவ்!

MKSTALIN,UDHAYANITHISTALIN,ANNAMALAI
MKSTALIN,UDHAYANITHISTALIN,ANNAMALAI

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார்கள். திமுக ஓரணியில் தமிழ்நாடு என உறுப்பினர் சேர்க்கையில் இறங்கியுள்ளார்கள். ஒட்டுமொத்த திமுகவும் இதில் தான் இறங்கியுள்ளார்.அமைச்சர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி   மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். பாஜக பூத் வலிமைப்படுத்தும் பணிகளையும் மாநாட்டு வேலைகளையும் தொடங்கியுள்ளது. 


இந்த நிலையில் மக்களிடையில் எடுக்கபடும் சர்வே ரிப்போர்ட்டுகளும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி கடந்த 2021 தேர்தலில்பெற்ற 45% வாக்குகளில் குறைந்தது10% வாக்குகளை உறுதியாக இழக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான்  2026 ல் திமுக எத்தனை வித்தைகளை காட்டினாலும் வெற்றி பெற முடியாது. என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக  பாஜக  கூட்டணி வெற்றி பெற்று தமிழக வரலாற்றில் புது ஆட்சி அமைக்கும் என தமிழக உளவுத்துறை கூறியுள்ளது. 

தேர்தல் தோல்வியே தமிழக முதல்வரின் ரோடு ஷோ உங்களுடன் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு  துவங்க காரணமாம். திமுக அரசு தமிழக மக்களுக்கு உண்மையில், நல்லாட்சி கொடுத்திருந்தால், தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் எதற்கு வீடு வீடாகப் போய் வாக்கு சேகரிக்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் கோபாலபுரம் தரப்பில் பல விசயங்கள் வெளியாகி வருகிறது. இந்த தேர்தலோடு முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெறும் எண்ணத்தில் உள்ளதாகவும்  அடுத்த முதல்வர் உதயநிதி தான் என உதயநிதி ஆதரவாளர்களிடையே கொளுத்தி போடப்பட்டுள்ளதாம். இதனால் கோபாலபுரத்தில் பெரிய பிரளயமே வெடித்துள்ளதாம், கனிமொழி தமிழகத்திற்குல் என்ட்ரி ஆவதற்குள் இந்த வேலையை முடித்து விட வேண்டும் என உதயநிதி தரப்பு முடிவெடுத்துள்ளதாம். 

மேலும் திமுகவின் மீது மக்கள் கடுப்பில் தான் உள்ளார்கள் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் படுதோல்வியை சந்தித்துள்ளாதாம். அண்டை மாநிலமான  ஆந்திரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இதில், 2 கோடிக்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்று உலக சாதனை புரிந்துள்ளனர்.

இதனிடையே பாஜக ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளதாம். பீஹாரில் கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி, ஆட்சிக்கு வந்ததும் மதுக் கடைகளை மூடினார், பாஜக கூட்டணி  முதல்வர் நிதிஷ்குமார். இதனால் ஏற்படும் நிதி இழப்பு குறித்து அவர் கவலைப்படவில்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மதுப்பழக்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக மட்டுமே கருதினார்.மதுக்கடைகளை மூடியதால் பீஹாரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடவில்லை. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் இறந்து போய்விடவில்லை. மாறாக பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.அதேநேரம், தமிழகத்தில் தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருந்தும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, நுாற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். எனவே பீகாரை குஜராத்தை போல் எங்கள் ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு என பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. 

திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரப்படும் நலத் திட்டங்கள் எல்லாம், ஓட்டு வங்கியை குறி வைத்து கொண்டு வரப்படுகின்றனவே தவிர, மக்களின் வளர்ச்சிக்காக அல்ல.மக்களை கவர்வதற்காக தேவையற்ற இலவசங்களுக்கு நிதியை வீணடித்து விட்டு, மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்று பழியை மோடி அரசு மீது சுமத்தி, மக்களை மூளைச் சலவை செய்து வருகிறது தி.மு.க., அரசு!

இதில், 'ஓரணியில் தமிழ்நாடாம்!'எதற்கு, இன்னும் ஊழல் செய்து, தமிழகத்தை திவாலாக்கவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.