24 special

இந்தியா இறக்கும் வெறித்தனமான வாய்பிளந்து நிற்கும் வல்லரசு நாடுகள் பங்கர் பஸ்டர்

PMMODI,ISRAEL
PMMODI,ISRAEL

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ஈரானின் ஃபோர்ட்டோ அணுசக்தி மையங்களை பி 2 பாம்பர்ஸ் போர் விமானங்கள் மூலம் GBU-57 என்ற ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசி அழித்தது. மொத்தம் 14 குண்டுகளை அமெரிக்கா அந்த அணுசக்தி மையங்கள் மீது ஈரானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. நம் நாடும் பங்கர் பஸ்டர்' ஏவுகணையை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இது அமெரிக்காவின் ‛பங்கர் பஸ்டர்' குண்டை விட பலமடங்கு ஆபத்தானது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்காவுக்கு நிகராக நம் நாடும் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணைகயை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. அதாவது நம் நாட்டிடம் ஏற்கனவே நம்மிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணையை மத்திய பாதுகாப்பு துறையின் நிறுவனமான டிஆர்டிஓ தயாரித்து இருந்தது.

இந்த அக்னி 5 ஏவுகணையில் சில மாற்றங்கள் செய்து அக்னி 5 ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணையை தயாரிக்கும் பணியை டிஆர்டிஓ தொடங்கி உள்ளது. 

இதன்மூலம் எளிமையாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே இலக்கை நோக்கி அந்த ஏவுகணையை அனுப்பி வைக்க முடியும். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டு 13,000 கிலோ எடை கொண்டது. அதில் 3,000 கிலோ மட்டுமே வெடிபொருள் இருக்கும்.

ஆனால் நம் நாடு தயாரிக்கும் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணையில் வெடிபொருள் மட்டுமே 7,500 கிலோ இருக்கும். எனவே அமெரிக்காவின் பங்கர் பஸ்டரை விட நம் நாட்டின் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை பெருத்த சேதத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி பூமிக்கடியில் அமைக்கப்பட்டு இருக்கும் கான்கிரீட் பில்டிங், பாதாள அறை என எதுவாக இருந்தாலும் கூட 80 முதல் 100 மீட்டர் (சுமார் 264 அடி முதல் 328 அடி) ஆழம் வரை நம் நாட்டின் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை முதலில் செல்லும். அதன்பிறகு தான் பயங்கர சத்துடன் வெடித்து சிதறும். இதன்மூலம் தரையின் மேல்பகுதியில் இருந்து பூமிக்கடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரையிலான அனைத்து கட்டமைப்புகளும் சல்லி சல்லியாக நொறுங்கிவிடும்

இந்த ஊடுருவல் தூரம் அமெரிக்காவின் ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளுக்கு 200 அடி என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஆனால் நம் நாட்டின் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணைக்கு 328 அட என்ற அளவுக்கு உள்ளது. இருப்பினும் அதிகப்படியான வெடிப்பொருட்களை நம் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை எடுத்து செல்லும் என்பதால் இது அமெரிக்காவின் ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை விட பேரழிவை தரும் ஆயுதமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் பொதுவாக அக்னி 5 ஏவுகணை 7 ஆயிரம் கிலோமீட்டர் வரை பறந்து சென்று தாக்கும். ஆனால் இப்போது நாம் தயாரிக்கும் இந்த அக்னி-5 ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை 2,500 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே செல்லும். அதிகப்படியான எடை மற்றும் பூமிக்கடியில் நுழைந்து தாக்க வேண்டும் என்பதால் அதன் ரேஞ்ச் குறைக்கப்பட உள்ளது. இருப்பினும் இந்த 2,500 கிலோமீட்டர் ரேஞ்ச் என்பது நம் நாட்டின் அண்டை நாடுகளை பதம் பார்க்க போதுமானதாகும்.

இந்த ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை பயன்படுத்தி நம்மை சீண்டும் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து அடிக்க முடியும். இது ஹைபர் சோனிக் ரக ஏவுகணை. அசுர வேகத்தில் பறந்து அடிக்கும். ஒலியை விட 8 முதல் 20 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும்.

அதாவது, மணிக்கு 9,800 கிலோ மீட்டர் வேகம் முதல் 24,500 கிலோ மீட்டர் வேகம் வரை சென்று எதிரிகளின் பாதாள இலக்குகளை சிதைத்து விடும். இவ்வளவு வேகத்தில் பறப்பதால் இதை இடைமறிப்பது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமானது. இதனால் அக்னி-5 ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை என்பது நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் மிகவும் முக்கியமான ஆயுதமாக மாறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.