24 special

தேர்தலில் இருந்து விலகினார் இந்திய வம்சாவளி...! அதிரும் அமெரிக்க தேர்தல் களம்!

vivek ramasami, Donald Trup
vivek ramasami, Donald Trup

அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரண்டு பேரும் ஆட்சி செய்துவந்த நிலயில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுவதாக தெரிவித்தார். நான் ஆட்சிக்கு வந்தால் பல மாற்றங்களை கொண்டுவருவதாக கூறினார். 528 தொகுதிகள் கொண்ட தேர்தலில் 270 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி அங்கு ஆட்சியை அமைக்கும். 


2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளருக்கான முதல் போட்டியான அயோவா உள்கட்சித் தேர்தலில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்திய பின்னர், பயோடெக் தொழிலதிபர் விவேக் ராமசாமி அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  மேலும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ட்ரம்ப்பை "21 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜனாதிபதி" என்று அவர் பாராட்டினார், அதே நேரத்தில் குடியரசுக் கட்சி வாக்காளர்கள் "புதிய கால்களை" தேர்ந்தெடுத்து "எங்கள் அமெரிக்கா முதல் நிகழ்ச்சி நிரலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்து உள்ளார். டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தான் விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும், டொனால்டு டிரம்ப்க்கு தொலைபேசி மூலம் அழைத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கும் ஆதரவு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் இந்த தேர்தலில் வெற்றியடைவதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் களமிறங்கி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் பிரச்சார பணிகளை மேற்கொண்டு இருந்தார். எக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கும் ராமசாமியின் முயற்சியை பாராட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.