24 special

விண்வெளித்துறையில் இந்திய தனியார் நிறுவனங்கள்..!

Modi
Modi

புதுதில்லி : இந்திய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான IN-SPACE இந்த துறையில் ஆர்வமுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது. இது தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளித்துறையில் கால்பதிக்க ஒரு வாய்ப்பையும் நல்ல ஒரு தொடக்கத்தையும் அமைத்துக்கொடுத்துள்ளது.


இந்த IN-SPACE ஒரு சுயசார்பு மற்றும் தன்னாட்சி மற்றும் ஒற்றைச்சாளர நோடல் ஏஜென்சி ஆகும்.இந்தியாவில் அமைந்துள்ள அரசு சாரா இந்திய தனியார் நிறுவனங்களின் விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் கண்காணிக்கவும் அவற்றிற்கான அங்கீகாரத்தை வழங்கவும் இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 24 அன்று துருவா ஸ்பேஸ் லிமிடெட், ஹைதராபாத் மற்றும் திக்கந்தரா ரிசர்ச் அண்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடட் ஆகிய நிறுவனங்கள் தங்களது பேலாடுகளை வெளியிட IN-SPACE அங்கீகரித்திருந்தது. துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் துருவா விண்வெளி செயற்கைகோள் ஆர்பிட்டல் டிபிளாயர் மற்றும் தொழில்நுட்பத்தை விளக்கும் பேலாட்,

திகந்தரா நிறுவனத்தின் ஆர்.ஓ பஸ்ட் இன்டெக்ட்ரேட்டிங் ப்ரோட்டான் ப்ளூயன்ஸ் மீட்டர் மற்றும் டோஸிமீட்டர் பேலாட்  இந்தவாரம் திங்கட்கிழமையன்று IN-SPACEஆல் அங்கீகரிக்கப்பட்டது. இந்த பேலட்டுகள் வருகிற ஜூன் 30 அன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள PSLV சுற்றுபாதை பரிசோதனை தொகுதியில் பறக்கும் என கூறப்படுகிறது.

துருவா ஸ்பேஸ் நிறுவனம் முழு அடுக்கு விண்வெளி பொறியியல் தீர்வுகளை உருவாக்குவதில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. திகந்தரா நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் விண்வெளியில் சூழ்நிலை விழிப்புணர்வு சென்சார் நெட்ஒர்க் இயங்குதளம் மற்றும் தரவுகள் தயாரிப்பு மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறது.

இது விண்வெளித்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என IN-SPACEதெரிவித்துள்ளது. தனியார் இந்திய நிறுவனங்களை இதன் மூலம் ஊக்கப்படுத்துவதால் பொருளாதார ரீதியில் மற்றும் வேலைவாய்ப்பு காரணிகளும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.