
ஒரு ஹிந்தி படம் தற்போது மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அந்த படம் “பெயர் தான் துரந்தர்”. பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய 6 அரபு நாடுகளில் இப்படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது.
ஆனால் தடைகளை தாண்டியும் ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ.640 கோடிக்கும் மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
இது ஒரு நல்ல என்டர்டெயின்மெண்ட் படம் என்பதைக் கடந்து, அது பேசும் உண்மை அரசியல் காரணமாகத்தான் பெரிய அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது அந்த படத்தில் என்ற கேள்விதான் பலரை தியேட்டருக்குள் இழுத்துச் சென்றது. படம் ஆரம்பிக்கிறதே 1999ஆம் ஆண்டு நடந்த கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தோடு தான்.
படத்தில் இன்னொரு மிகப் பெரியசீன் புயலை கிளப்பியுளது வருகிறது. இந்தியாவின் ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படும் கரன்சி பிளேட்டுகள், ஒரு இந்திய அமைச்சர் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்றதாக. “Based on true story” என்ற டேக் உடன் இந்த காட்சி வருகிறது சமூக ஊடகங்களில் இந்த ஒரு காட்சிதான் பழைய இந்தியாவில் இப்படி எல்லாம் நடந்ததா என மக்களை யோசிக்க வைத்துள்ளது
தீவிரவாதிகளுக்கு கள்ள ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன, அவற்றுக்கான பணம் எப்படி ஏற்பாடு செய்யப்படுகிறது, கள்ளநோட்டுகள் எப்படி இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடப்படுகின்றன என்பதையும் படம் எளிய மொழியில் காட்டுகிறது. . குறிப்பாக ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்படும் காகிதம், பாதுகாப்பு இழை போன்ற முக்கியமான மூலப்பொருட்கள் ஒருகாலத்தில் வெளிநாட்டு நிறுவனமான De La Rue மூலம் இந்தியா வாங்கியுள்ளது, அதே நிறுவனம் பாகிஸ்தானுக்கும் இதே மாதிரியான மூலப்பொருட்களை வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதன் காரணமாக, 2009–2010 காலகட்டத்தில் இந்தியாவில் புழங்கிய போலி ரூபாய் நோட்டுகள், உண்மையான நோட்டுகளுக்கு நிகரான தரத்தில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்தது.
பணம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பாகிஸ்தானை சேர்ந்த போலி நோட்டு மாபியாவின் கைகளுக்கு சென்றுள்ளது , அந்த நோட்டுகள் நேபாளம் மற்றும் வங்கதேச எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் பரவியுள்ளது . இதைத் தொடர்ந்து இந்திய அரசு De La Rue நிறுவனத்தை பிளாக்லிஸ்ட் செய்தது. ஆனால், அதற்குப் பிறகும் சில ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் பொருட்கள் இந்தியாவுக்குள் வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து தான் பிரதமராக மோடி பதவியற்றேபின் 2016ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பீடு நடவடிக்கை, பழைய ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி செயல்பட்ட போலி நோட்டு நெட்வொர்க்கை பெரிய அளவில் முடக்கிவிட்டது. இதற்குப் பிறகு இந்தியா கரன்சி நோட்டுகளுக்கான மூலப்பொருட்களில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தது.
துராந்தர்’ ஒரு சாதாரண ஆக்ஷன் திரைப்படமாக முடிந்து விடவில்லை. இது ஒரு காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவு. இந்தியா அரசியல் ரீதியாக எவ்வளவு கட்டுப்பட்ட நிலையில் இருந்தது, அந்த சூழலில் உளவுத்துறை எப்படி தனியாக நின்று நாட்டை காத்தது, அவர்களின் தியாகங்கள் எப்படி பொதுமக்களின் கவனத்திற்கு வராமல் மறைந்து போனது என்பதை நினைவூட்டும் படம் இது. பாகிஸ்தானுக்கு இந்திய அரசியல்வாதிகள் எப்படி உதவி செய்தார்கள் என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
