
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் காரணமாக, ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. அதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நவீன வகை ஆயுதங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வகையில், பல ரகசிய ஆயுதங்களை இந்திய பாதுகாப்புத் துறை உருவாக்கி வருகிறது. அதில், இந்தியாவின் டாப் சீக்ரெட் ஆயுதமாக கூறப்படும் காளி-5000 செய்த சம்பவத்தால் உலக வல்லரசுகள் வாயை பிளந்து நிற்கின்றன . அடிவாங்கிய சீனா பம்மி வாயை மூடி கிடக்கிறது.
காளி-5000 ஆயுதத்தை பலர் லேசர் ஆயுதமாக பாவிக்கின்றனர். ஆனால், லேசர் போன்ற அம்சங்களை பெற்றிருந்தாலும், இது வேறு வகையான பல அனுகூலங்களை பெற்றிருக்கிறது. லேசர் ஆயுதத்தை விட சிறப்பான பயன்பாடு கொண்ட இந்த காளி திட்டம் முதலில் தொழிலக பயன்பாட்டுக்காகத்தான் உருவாக்கப்பட்டது. இது லேசர் ஆயுமாக பலர் கருதினாலும், இது லேசர் ஆயுதத்திலிருந்து வேறுபடுகிறது. அதிக திறன் கொண்ட எலக்ட்ரான்களை வெளிப்படுத்தும் எக்ஸ்ரே சாதனமாக இதனை உருவாக்கினர். Kilo Ampere Linear Injector என்பதின் சுருக்கமே KALI என்ற பெயர் பெற்றிருக்கிறது.
இதுவரை காளி 80, காளி 200, காளி 1000, காளி 5000 மற்றும் காளி 10000 என்ற குடும்ப வரிசையில் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த சாதனத்தில் அதி திறன் மிக்க எலக்ட்ரான்களை உருவாக்கும் கருவியும், அதனை ஒருமுகப்படுத்தி இலக்கை நோக்கி செலுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.லேசர் ஆயுதத்தின் மூலம் எதிரிகளின் விமானம் அல்லது ஏவுகணையில் துளை போட்டு அழிக்கும். இதற்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.. ஆனால், இந்த காளி ஆயுதம் நொடிப்பொழுதில் எதிரி விமானம் மற்றும் ஏவுகணைகளின் சாஃப்ட்வேரை முற்றிலுமாக அழிக்க வல்லதுஇதனை சாஃப்ட் கில்லர் என்று அழைக்கின்றனர். பிற ஆயுதங்களை போல இல்லாமல், சாஃப்ட்வேரை செயலிழக்க வைத்து எதிரி விமானங்களையும், ஏவுகணையையும் வீழ்த்தும்.
தேஜஸ் போர் விமானத்தின் சாஃப்ட்வேர்களின் கதிர்வீச்சை தாங்கும் திறனை பற்றி சோதிப்பதற்காக, இந்த காளி ஆயுதம் முதலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது இதனை தனி ஆயுதமாக தற்போது உருவாக்கியுள்ளார்கள். இந்தியாவின் வான்வெளி கண்காணிப்பு மையமாக செயல்படும், இலூஷின் Il-76 விமானத்தில் காளி மைக்ரோவேவ் துப்பாக்கியை பொறுத்தியுள்ளார்கள். இதனை ஆங்கிலத்தில் deadly weapon என்ற ரகத்தில் அதிபயங்கர ஆயுதமாக குறிப்பிடுகின்றனர். இது நிச்சயம் இந்திய ஆயுத பலத்தை புதிய கோணத்தில் கொண்டு சென்றுள்ளது.
காளி எனும் பயங்கர ஆயுதத்தால் ஒரு விஷயத்தை சாதித்திருக்கின்றது, ஆச்சரியம் என்னவென்றால் அயன்பீம் என இஸ்ரேல் இதனை இப்போதுதான் சோதிக்கும் போது இந்தியா அசத்தியிருக்கின்றது இந்த நிலையில் இந்தியாவினைவேவு பார்க்க வந்த சீன செயற்கைகோளை காளி தனது ஒளிக்கற்றைகளால் செயலிக்க செய்துள்ளது. அதாவது செயற்கைகோள் அபப்டியே இருக்கும் ஆனால் செயல்படாது,சீனா இதனை கண்டு ஆடிபோய் நிற்கின்றது காரணம் அவர்களிடமே இல்லாத ஆயுதம் இது, இது வெறும் மிரட்டல்தான் உண்மையான காளி இனி தன் விமானம் ஏவுகனை எல்லாம் உருக்கி போடும் என்பதை அறிந்த சீனா ஆடிகிடக்கின்றது விஷயத்தை வெளிகொண்டுவந்த நாடு அமெரிக்கா, அவர்கள் இதை கண்டிக்கவில்லை. உலக அரங்கில் இதுவரை 3ம் 4ம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது வல்லரசுகளுடன் முதல் இடத்தில் அமர்ந்திருக்கின்றது.
