
அபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கண்டித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் உள்ளன. இதனால் அந்த 2 நாடுகளையும் புறக்கணிக்க நம் நாட்டு மக்கள் முடிவு செய்து வருகின்றனர். அதேபோல் வர்த்தக உறவையும் துண்டித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் துருக்கி உடனான வர்த்தகம் என்பது கைவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வரிசையில் நம் இந்தியர்கள் கேன்சல் செய்யும் திருமணத்தால் துருக்கிக்கு சுமார் ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கி என்பது நம் நாட்டுக்கு பெரும் துரோகம் செய்தது. துருக்கி சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் துருக்கி சென்று வருகின்றன. அதேபோல் 2023ம் ஆண்டில் துருக்கியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் நம் நாடு துருக்கிக்கு உதவிகளை வழங்கியது. நம் நாட்டில் இருந்து மீட்பு படையினர், டாக்டர்கள், நர்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் அதையெல்லாம் துருக்கி மறந்துவிட்டு பாகிஸ்தான் பக்கம் சென்றது. அதோடு நம்மை கண்டித்தது. அதுமட்டுமின்றி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் நம்மை தாக்க ட்ரோன் மற்றும் அதனை ஆபரேட் செய்யும் ஆபரேட்டர்களை வழங்கி துருக்கி நம்பிக்கை துரோகியானது. இதனால் துருக்கிக்கு இந்திய மக்கள் பாடம் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கியை புறக்கணிக்கும் முடிவை சுற்றுலா பயணிகள் எடுத்துள்ளனர். அதேபோல் கிரானைட் வர்த்தகர்களும் துருக்கி நாட்டின் பொருட்களை இறக்குமதி செய்வதையும், துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் இறக்குமதியை நிறுத்தியது. இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் அடியை கொடுக்க உள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துருக்கி சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இடம் என்பதால் நம் நாட்டை சேர்ந்த பணக்காரர்கள் துருக்கியில் வைத்து திருமணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன்மூலம் துருக்கி கல்லா கட்டி வந்தது. தற்போது நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டால் பலரும் துருக்கியில் திருமணம் செய்ய எடுத்த முடிவை கைவிட்டுள்ளன. இதன்மூலம் துருக்கிக்கு நேரடியாக ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று அந்த பிரிவை நன்கு அறிந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் துருக்கியில் வைத்து நம் நாட்டை சேர்ந்தவர்களின் 50 திருமணம் நடந்தது. இதில் ஒவ்வொரு திருமணத்துக்கான செலவு என்பது ரூ.25 கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த திருமணம் என்பது துருக்கியில் ஹோட்டல் பிசினஸை மட்டும் வளர்க்கவில்லை. அலங்காரம் செய்யும் ஊழியர்கள், மலர் விற்பனையாளர்கள், உணவு வழங்கும் நிறுவனங்கள், டிராவல் ஏஜென்ட், இசை கலைஞர்களுக்கும் வலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
துருக்கியில் வரும் நாட்களில் 50 திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 30 திருமணங்கள் தொடர்பான பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பலரும் துருக்கிற்கு பதில் நம் நாட்டில் ராஜஸ்தான், கோவா, கேரளா, உதய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது. இது துருக்கிக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துருக்கியில் நடக்கும் இந்தியர்களின் திருமணத்தால் அந்த நாட்டுக்கு ரூ 2000 முதல் 3 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும். தற்போது அந்த வருமானம் பெருமளவில் பாதிக்கப்ட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த 10 நாட்களில் மட்டும் இந்தியாவால் துருக்கிக்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.