24 special

இந்தியாவின் ஸ்மார்ட் மூவ்..! கதறும் பாகிஸ்தான்..?

Modi
Modi

புதுதில்லி : ஐநா சபை, ஈரான் துருக்குஇ எகிப்து போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் தூதரகங்கள் அதிகாரபூர்வ கணக்குகளை ட்விட்டர் இந்தியா முடக்கியதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து செய்லபட்டு வரும் அரசு ரேடியோவின் ட்விட்டர் கணக்கையும் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் இந்த அதிகாரபூர்வ பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக அதன் அதிகாரபூர்வ கணக்குகளை மீட்டெடுக்குமாறு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இறையாண்மை தேசபாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பொது ஒழுங்கு குறித்த தவறான மற்றும் புனையப்பட்ட செய்திகளை தொடர்ந்து பாகிஸ்தானை தளமாக கொண்ட ஆறு செய்தி சேனல்கள் உட்பட 16 யூட்யூப் சேனல்களை இந்தியா தடைசெய்திருந்தது.

மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் நடவடிக்கை எடுத்திருப்பது பாகிஸ்தானை பதறசெய்துள்ளது. பாகிஸ்தானின் அந்த சேனல்கள் மக்களிடையே பீதியை உண்டாக்கவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை ஒளிபரப்பிய அந்த சேனல்களுக்கு 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முகநூல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் வலைத்தளங்களில் இந்தியாவின் மாண்பை குறைக்கும் வகையில் தவறான செய்திகளை தகவல்களை பரப்பியதற்காக இந்தியா பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்திருந்தது. மேலும் பாகிஸ்தானின் அதிகாரபூர்வ கணக்குகள் மட்டுமல்லாமல் போலியான கணக்குகள் மூலம் தவறான தகவல்களை பரப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்கில் தவறான செய்தியை தகவலை ஹேஷ்டேக்கிட்டு பரப்பிவிட்டு பின்னர் அந்த கணக்கை டீயாக்டிவேட் செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஒரு சர்ச்சையை கிளப்பியவருந் மீண்டும் வேறு பெயரில் கணக்குகளை தொடங்கி மீண்டும் அதேசெயலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து இந்தியா பாகிஸ்தானை வன்மையாக கண்டித்ததுடன் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. அதன்காரணமாகவே தற்போது பலநாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரக கணக்குகளை ட்விட்டர் இந்தியா முடக்கியுள்ளது.