புதுதில்லி : மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் என்ற அனுமதிக்காத இண்டிகோ நிறுவனத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மத்திய விமானபோக்குவரத்து அமைச்சர் சிந்தியா தானே விசாரணையில் இறங்கவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் விமான நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் தனது அறிக்கையில் " குழந்தை மற்ற பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. பாரபட்சமான நடத்தை பற்றிய பரிந்துரைகளை மறுத்ததால் பெருமைகொள்கிறது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த சிறப்பு திறன் கொண்ட குழந்தை பீதியில் இருந்தது. மேலும் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது.
குழந்தை அமைதியாகும் வரை பணியாளர்கள் பொறுமையாக இருந்தனர். இருந்தபோதிலும் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்ததால் அந்த குழந்தையின் குடும்பத்தினரால் விமானத்தில் என்ற முடியவில்லை. விமான ஊழியர்கள் காத்துக்கொண்டிருந்ததில் எந்த பயனும் ஏற்படவில்லை" என தெரிவித்துள்ளது. புதுதில்லியில் இருந்து ராஞ்சி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட இந்த சமபாவம் குறித்து சகபயணி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மனிஷா குப்தா என்ற அந்த பயணி " குழந்தை கட்டுப்பாடற்று இருக்கிறது என ஊழியர்கள் கூறியபோது நீங்கள்தான் கட்டுப்பாடின்றி செயல்படுகிறீர்கள் என கூறினோம். மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற்ற கூடாது என விமான நிறுவன நெறிமுறைகள் எதுவும் இருக்கிறதா என கேட்டோம். ராஞ்சி செல்லும் விமானத்தில் மருத்துவர்களும் இருந்தார்கள். அவர்கள் விமானத்தில் செல்லும்போது மருத்துவ உதவிகளை குழந்தைக்கு தர தயாராய் இருந்தார்கள்.
ஆனால் இண்டிகோ நிறுவனம் மறுத்துவிட்டது" என குறிப்பிட்டுள்ளார். விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் மற்றும்ஜ சிவில் விமானபோக்குவரத்து இயக்குனரகம் இரண்டும் இண்டிகோ நிறுவனத்திடமிருந்து விளக்க அறிக்கை கேட்டுள்ளது. மத்திய அமைச்சர் சிந்தியா இந்த விவகாரத்தில் நேரடியாக தான் விசாரணையில் இறங்கப்போவதாக இன்று தெரிவித்துள்ளார்.