24 special

காங்கிரஸ் ஆட்சியில் இந்திராவின் பேய் வேட்டை. புதைக்கிறா..? புளுகிறாரா ப.சிதம்பரம்... சவுக்கடி கொடுத்த பா.ஜ.க!

P chidambaram
P chidambaram

நாடாளுமன்ற மேலவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜாவுக்கு இருந்திருந்தால் அரசியல் சாசனத்தை திருத்துவார்கள், சிதைப்பார்கள், மாற்றி இருப்பார்கள், மாற்றி எழுதுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் கருத்துக்கூறும்போது, ‘’ப.சிதம்பரத்துக்கு சக்தி குறைந்து வருகிறது அல்லது அவர் புளுகுகிறார்.வழக்கறிஞராக இருக்கும் அவருக்கு அரசியல் சாசன சட்ட சரித்திரமே மறந்துவிட்டது. இதுவரை 100 முறைக்கு மேல் அரசியல் சாசனம் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்பது முறைக்கு மேல் அதை மாற்றி எழுதியது யார் என்பதை சிதம்பரத்துக்கு மறந்துவிட்டது.

அது பாஜக அல்ல.காங்கிரஸ்தான். 1921ல் தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்த போது அனைத்து அடிப்படை உரிமைகளின் மகத்துவத்தையும் குறைத்து அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்தது அது. அந்த திருத்தம் சொத்திரிமையைத் தவிர மற்ற உரிமைகளை பாதிக்காமல் இருக்க அதன் வீச்சை குறைத்து 1923 இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். 

அடிப்படை உரிமைகளை பறிக்கும் திருத்தங்களை தடுத்து தீர்ப்பளித்த மூன்று மூத்த நீதிபதிகளை அவமானப்படுத்தினார் இந்திரா. அவர்களுக்கு கீழே நான்காவதாக இருந்து ஏ என்ரே என்ற நீதிபதியை அரசியல் சாசன பண்புக்கு மாறாக தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுத்து அந்த மூன்று நீதிபதிகளின் கேவலப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார். பிறகு எமர்ஜென்சி கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினர்களை கூண்டோடு மிசா சட்டத்தில் சிறையில் அடைத்து ஒரே நாளில் அரசியல் சாசனத்தை திருத்தி அமைத்தார்.

அதுதான் கருப்பு சட்டம் என்று நாடே கூறிய அரசியல் சாசன 42 வது திருத்தம். அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறித்து யாரை வேண்டுமானாலும் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கலாம் தேசவதி என்று கூறி எந்த அமைப்பு வேண்டுமானாலும் தடை செய்யலாம் அது சரியா இல்லை இல்லையா என்பதை நீதிமன்றம் விசாரணை செய்யக்கூடாது என்று அரசியல் சாசனத்தை மாற்றியது காங்கிரஸ். 

1977 ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் பிழைத்தது.எனது ஆட்சியில் அந்த திருத்தங்களை ஒட்டுமொத்தமாக மாற்றி கிழித்து குப்பையில் போட்டது நாடாளுமன்றம். ஜனதா கட்சி ஆட்சிக்கு வர முக்கியமான காரணம் எமர்ஜென்சியில் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் நடத்திய தலைமுறைவி போராட்டம்.

இல்லையென்றால் அன்றே நம் நாடு ஒரு கட்சி ஒரு குடும்பத்தின் எதேச்சிகர நாடாக ஆகியிருக்கும். இவ்வளவு கொடுமைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடியது பாஜக.அரசியல் சாசனத்தை திருத்தி அடிப்படை உரிமைகளை பறித்தது காங்கிரஸ் அதை தடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமானப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது காங்கிரஸ்.இதை திருத்தங்களில் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடிய அரசியல் சாசன சட்ட நிபுணர் என் ஏ பல்கிவாலா ஒரு புத்தகமே எழுதினார்.

எப்படி மறந்தார் அல்லது ஏன் மறைக்கிறார்,பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் சாசனத்தை தெறித்து விடுவார்கள் பாஜகவினர் என்று கூறும் சிதம்பரத்துக்கு ஒன்று அரசியல் சாசனத்தை காங்கிரஸ்தான் சிதைத்தது என்பது வயது காரணமாக அவருக்கு ஞாபகம் இல்லை அல்லது அப்பட்டமாக புளுகுகிறார் அவர்’’ என்கிறார்கள் பாஜகவினர்.