இந்தித் திணிப்பு, தமிழ் துரோகம், திராவிடப்பற்று இவற்றைக் கொண்டே திமுக பல ஆண்டுகளாக தனது அரசியலை நுழைத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து வருகிறது. தங்களது ஆட்சியில் நடக்கும் அவலத்தை திசைமாற்ற இந்தித் திணிப்பை இப்போது திமுக கடுமைஉயாக முன்னெடுத்துள்ளது. ஆனால், ஆட்சிகள், காட்சிகள் மாற மக்கள் இன்னும் இந்தித் திணிப்பு, திராவிட அரசியலை நம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள். மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆகவே அதற்கேற்றாற்போல திமுகவும் தங்களது அரசியல் களத்தை எதார்த்த களமாக்கி கடந்து சென்றால் வாழ்வு இல்லையேல் மக்கள் பலத்த பதிலடி கொடுப்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இதுகுறித்து அரசியல் களமறித்து மூத்த எழுத்தாளரிடம் பேசினோம். ‘’திராவிட மாடல், பெரியார் சமூகநீதி, தமிழ் தாய், ஹிந்து ஆதிக்கம் என்றெல்லாம் தொடர்ந்து பேசுசி வரும் திராவிட தமிழ் அரசியல் மாடல்களில் இருக்கும் அடிப்படை முரண்பாடுகளை உணர வேண்டும். இப்போது தனது பாரம்பரிய ஹிந்தி எதிர்ப்பை திமுக தொடர்ந்து கடினமாக்கி வருகிறது. தமிழகத்தில் வீசும் ஆன்மீகப் பேரலையால் ஈவேராவின் கடவுள் எதிர்ப்பு கொள்கை கலகலப்பு கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கருணாநிதி குடும்பத்தினரும் திமுக பிரபலங்களின் குடும்பங்களுக்கு கோவில் கோயிலாக சென்று வெளிப்படையாக ஹோமங்களும்,யாகங்களும் செய்கிறார்கள்.
மேலும் திமுக ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல என்று அடிக்கடி ஸ்டாலின் சத்தியம் செய்வது வள்ளலாரம், பெரியாரும் ஒன்றே என்று கி.வீரமணி பேசுவது எல்லாமே ஈவேராவின் கடவுள் எதிர்ப்பு முற்றிலும் தோல்வி என்று அவர்கள் ஒப்புக் கொள்வதை காட்டுகிறது. மேலும் திராவிடம், தமிழ் இரண்டையும் இணைத்து திமுக அரசியல் செய்வதும் நெடுநாள் நீடிக்காது. ஏன் தமிழையும், தமிழ் மக்களையும், தமிழ் பெரியோரையும், தமிழ் நூல்களையும் கேவலமாக ஈவேரா விமர்சித்ததை நெடுநாள் மறைத்து குறிப்பாக சமூக ஊடகங்கள் பெருகிவிட்டது.இந்த காலத்தில் திமுக தமிழ் சார்ந்து அரசியல் செய்வது கடினம். தமிழைப் பழித்த அவர் பெயர் இல்லாமல் திராவிடம் சார்ந்த அரசியலும் செய்ய முடியாது. நம் கருத்தில் ஈவேராவின் பெயர் நாளடைவில் திமுகவுக்கு அரசியல் பாரமாகவே தவிர, அரசியல் சாதகமாக இருக்காது.
திராவிட அடையாளம் வேலைக்கு ஆகாது என்பதை நெடுநோக்குடன் கண்டு விழுந்து தான் சீன படையெடுப்பு தருணத்தில் அதனை தூக்கி எறிந்து விட்டு,தமிழ் அடையாளத்தை கையில் எடுத்தார் அண்ணாதுரை.அதன் பிறகு ராஜாஜி உட்பட முக்கியமான தலைவர்கள் திமுகவை ஆதரித்தனர்.
அது 1967-ல் திமுகவுக்கு பொது அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. இன்று இருக்கும் திமுக அன்று அண்ணாதுரை உருவாக்கிய கட்சியே தவிர, ஈவேரா உருவாக்கிய திகவுக்கு பிறந்த திமுக அல்ல.ஈவேரா நடித்த திராவிட பிரிவினைவாத ஹிந்து, திமுக தேசிய எதிர்ப்பு கட்சியா இல்லை.அண்ணாதுரை உருவாக்கிய பொறுப்பாளர் தனி கட்சியா? என்பதை திமுக முடிவு செய்ய வேண்டிய திருப்புமுனையில் இருக்கிறது.
ஈவேரா கூறிய திராவிடம் vs அவர் படித்த தமிழ், ஹிந்து துவேஷம் vs தாங்களே செய்யும் நேத்திக் கடன்கள் போன்ற முரணான கொள்கைகளை இணைத்து திமுக இனி தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்.
நம் கருத்தில் 1963ல் திமுக சந்தித்த திருப்புமுனையை இன்று மீண்டும் சந்திக்கிறது. கட்சிக்கு சரியான திசையை காட்ட அன்று அண்ணாதுரைக்கு இருந்த தெளிவு இன்று ஸ்டாலினுக்கு தேவை. இறுதியாக கருணாநிதி ஒரு பக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா மறுபக்கம் என்று 50 ஆண்டுகள் இருந்த இரு துருவ தமிழக அரசியல் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. அடிப்படையில் மாறவில்லை என்றால் இதனால் தொடரும் கதை அல்ல.
எந்த கட்சியும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் செல்வாக்குடன் இருக்காது. இன்று எந்தெந்த பிம்பங்களை வைத்து தமிழக அரசு களத்தில் அரசியல் நடக்கிறதோ அதே கவர்ச்சியுடனும், ஈர்ப்புடனும் இருக்காது’’ என திமுக நடத்தி வரும் அரசியலுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.