24 special

பிஜேபியில் உட்கட்சி பூசல்..? டென்ஷனான முதல்வர் !

Chief minister of karnataka
Chief minister of karnataka

கர்நாடகா :  நேற்று மைசூருவில் நடைபெற்ற கர்நாடக பிஜேபி தலைவர்கள் சந்திப்பில் பிஜேபி தேசிய அமைப்புச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உரையாற்றினார். அதில் கர்நாடகாவில் அடுத்த 2023 ல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்டு பேசியிருந்தது கர்நாடக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


பிஜேபி மூத்தநிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய சந்தோஷ் " கடந்த டெல்லி மாநகராட்சி கவுன்சில் தேர்தலில் தற்போதுள்ள கார்பரேட்டர்களுக்கு சீட் வழங்கப்படாது என முடிவெடுத்து புதிய வேட்பாளர்களை நிறுத்தினோம். அதேபோல குஜராத்தில் இரண்டுமுறைக்கு மேல் இருந்த கவுன்சிலர்களையும் அவர்களின் உள்வட்டத்தில் உள்ளவர்களையும் இறக்காமல் புதிய வேட்பாளர்களை தேர்வுசெய்தோம். இது போன்ற அதிரடியான பெரிய அளவிலான மாற்றங்களை பிஜேபியால் மட்டுமே செய்யமுடியும்.

பின்வரிசையில் அமர்ந்தவர்கள் அனைவரும் முன்வரிசையில் வந்துவிட்டனர். கர்நாடக மாநிலத்தில் சில கட்சிகளிலும் சில மாவட்டங்களிலும் மக்கள் நிரந்தரமாக பின்வரிசையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்றும் தைரியமும் வலிமையும் பிஜேபியிடம் உள்ளது.இது எல்லா இடங்களிலும் நடக்கும் என கூறவில்லை. குஜராத்தில் முதல்வர் மாற்றப்பட்டதும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்றப்பட்டது. இது புகாரின் அடிப்படையில் அல்ல" என கூறினார்.

நேற்று மாலை முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் " அவர்கள் இப்போது திறமை பற்றி பேசுகிறார்கள். நன் என்னை திறமையான நபராக நினைக்கவில்லை.தாங்கள் புத்திசாலிகள் திறமையானவர்கள் என்ற மாயையில் வாழும் சிலர் இருக்கிறார்கள். நான் எந்த மாயையிலும் வாழவில்லை. எனது மாநில மக்களும் எனது மாநிலத்தின் ஏழைகளும் திறமையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறேன். 

மாநில மக்களும் மத தலைவர்களும் எனது திறமையை முடிவுசெய்யவேண்டும். எங்கள் பணியை பொறுத்து அளவிடுங்கள். எங்கள் வார்த்தைகளை கொண்டு அல்ல.நாங்கள் எங்கள் செயல்திறன் அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிப்போம். அவர்கள் ஆசிர்வாதத்தை பெறுவோம்" என பேசியுள்ளார். மேலும் வருகிற 2023 சட்டமன்ற தேர்தலில் பல மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பசவராஜ் பொம்மைக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என யூகங்கள் எழுந்துள்ளன. 

மேலும் கர்நாடகாவில் மாற்றம் இருக்கும் என சூசகமாக சந்தோஷ் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் பொம்மையின் பேச்சுக்கள் கர்நாடக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.