Tamilnadu

தேவையில்லாத வேலை கிருஷ்ணசாமி விவகாரம் முதல்வர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சி

dr krishnasamy
dr krishnasamy

தமிழகத்தில் ஊடக விவாதத்தில் எழுந்த சர்ச்சை மீண்டும் புதிய தமிழகம் கட்சிக்கு மஹாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவிற்கு என்ன மாற்றத்தை உண்டாக்கியதோ அதே போன்ற மாற்றத்தை தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு உண்டாக்கியுள்ளது.


கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது அவருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர் ஒரு கட்டத்தில் மேடையில் ஏறி தள்ளுமுள்ளுவில் ஈடுபட முயன்றனர் ஆனால் அதற்குள் புதிய தமிழகம் கட்சியினர் மேடை நோக்கி கூட திமுகவினர் அரங்கில் இருந்து வெளியேறினர்.

பொது வாக தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தின் அடையாளமாக பார்க்க படுபவர்களில் முக்கியமான தலைவர்கள் கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன், இதில் தீவிர அரசியலில் இருப்பது கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி. மேலும் தென் மாநிலங்களில் இந்த கட்சிக்கு ஆதரவு மட்டங்கள் உள்ளன.

இந்த சூழலில் கிருஷ்ணசாமி மீது திமுக தொண்டர்கள் தாக்க முற்பட்டனர் என்ற தகவல் பரவ அது புதிய தமிழகம் கட்சியை தாண்டி தேவேந்திரர் குல சமூகத்தினரை கொந்தளிக்க செய்துள்ளதாம் சமீபத்தில் தேனிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கள நிலவரம் குறித்து அம்மாவட்ட காவல்துறை சார்பிலும் உளவு துறை சார்பிலும் அறிக்கை கொடுக்கப்படும் இதன் அடிப்படையில் சில திட்டங்களில் மாறுதல் இருக்கும்.

அப்படி ஒன்று தான் கிருஷ்ணசாமியை திமுகவினர் அவமானபடுத்தியதாக பல இடங்களில் நடைபெற்ற போராட்டம், இந்த போராட்டத்தை மையமாக கொண்டு இனி வரும் காலங்களில் திமுகவிற்கு எதிராக தீவிரமான நேரடி கள அரசியலை புதிய தமிழகம் கட்சி முன்னெடுக்க போகிறது எனவும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக தலைவர்களை தென் மாவட்டங்களில் நுழைய முடியாத சூழலை உண்டாக்க புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தயாராகி வருவதாக கூறப்பட்டு இருக்கிறது.

விரைவில் மாநிலம் முழுவதும் கிருஷ்ணசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த சுற்று பயணங்களில் தற்போது எப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியலில் டைம் லைனில் இல்லாத ராஜ் தாக்கரே மீண்டும் ஊர்வலம் மூலம் முன்னிலை பெற்றுள்ளாரோ அதே போன்று தேவேந்திரர் குல வேளாளர்களின் முகமாக கிருஷ்ணசாமி மாற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை அதிகரித்து வரும் சூழலில் தற்போது தேவையில்லாமல் ஒரு சமூகத்தின் தலைவராக பார்க்கப்படும் கிருஷ்ணசாமி மீது திமுகவின் எதிர்ப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் திமுகவின் தோல்வியை நிர்மாணிக்கும் சக்தியாக மாறலாம் என்று முதல்வர் ஸ்டாலினிடம் இப்போதே கூறப்பட்டு உள்ளதாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் விவாதத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து  கடுமையாக கண்டித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள், ஏற்கனவே மின் வெட்டு விவகாரம் ஒரு பக்கம் மக்கள் மத்தியில் அதிருப்தியை கொடுக்கிறது, மத்திய அரசு எப்போதும் என்ன செய்யலாம் என காத்து இருக்கிறது, இப்போது கிருஷ்ணசாமி விவாகரமும் திமுகவிற்கு பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளதாம்.