24 special

பொதுசிவில் சட்டம்..! ஒவைசியை கதறவிட்ட பிஜேபி !

Bjp
Bjp

ஹைதராபாத் : இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 83% சதவிகிதம் பெற்று பிஜேபி முதலிடத்தில் உள்ளது. ஆம் ஆத்மீ 23 சதவிகிதமும் மமதாவின் திரிணாமூல் 47 சதவிகிதமும் திமுக 32 சதவிகிதமும் பெற்றிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் பிஜேபி ஆளும் மாநிலங்களான அஸ்ஸாம் உத்திரபிரதேசம், கோவா, குஜராத் உத்திரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த முனைப்புக்காட்டி வருகின்றன. உத்திரபிரதேச மாநில துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.நிலக்கரியை கொண்டு செல்ல பயணிகள் ரயில் நிறுத்தப்படுகிறது. 

கடந்த மார்ச் மாதம் புதிய அரசு அமைத்தவுடன் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருந்தார். ஹிமாச்சலப்பிரதேசத்திலும் இதுகுறித்த குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் கூறியிருந்தார். மேலும் நேற்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பொதுசிவில் சட்டம் அமைவதை இஸ்லாமிய பெண்கள் விரும்புகிறார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் AIMIM  நிறுவனர் அசாதுதீன் ஒவைசி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் " பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரே மாதிரியான சட்டம் தேவையில்லை. மின் நெருக்கடியை சமாளிக்க வழியை கண்டறியுங்கள். வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்ச்சி செய்யுங்கள். கோவாவில் உள்ள சிவில் சட்டப்படி ஒரு ஹிந்து ஆண் தனது முதல்மனைவிக்கு 30 வயதிற்குள் ஆண் குழந்தை இல்லையென்றால் இரண்டாவது திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

முதலில் மதுவை தடைசெய்யுங்கள். நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான வருமானம் வருவதை உறுதிசெய்யுங்கள். பொதுசிவில் சட்டம் தேவையில்லை" என கூறினார். பொதுசிவில் சட்டம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என்று கூறுவதாகவும் சலுகைகள், கல்வி மற்றும் அரசின் நலத்திட்டங்கள் மதம் ஜாதி அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.