மொபைல் போன் அப்படின்னு எடுத்துக்கிட்டாளே அது ஒரு இன்றியமையாத விஷயமாத்தான் இருக்கு. இன்னைக்கு உலகத்துல ஃபோன் இல்லாமல் யாரையுமே பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நிலைமை தான் இன்னைக்கு உருவாகிக்கிட்டு இருக்கு. பெரியவர்களில் இருந்து சின்ன குழந்தைகள் வரைக்கும் எல்லாருமே இந்த மொபைல் போனுக்கு அடிமை தான்னு சொல்லலாம். இதில் குழந்தைகளை எடுத்துக்கிட்டா சாப்பிடும் போதும், தூங்கப் போகும் போதும் போன பாக்கணும் அப்படின்னு சொல்லி அடம் பிடிக்கிற குழந்தைகளும் இருக்காங்க. அவங்க பெற்றோர்களும் சரி குழந்தை அழுகுது அப்படின்னு போனை கொடுத்துவிடுறாங்க. மேலும் முன்ன மாதிரி குழந்தைகள் வெளியே போய் விளையாடுற பழக்கத்தையே மறந்துட்டாங்க. ஏன்னா?? இன்னைக்கு போனிலேயே எல்லா விளையாட்டும் வந்துருச்சு.
அதுவும் அந்த விளையாட்டு எல்லாம் குழந்தைகளை கவரக்கூடிய வகையிலும் இருக்கு. அதனாலேயே குழந்தைகள் வெளியே போய் விளையாடுற விளையாட்டு பெரிதும் விரும்புவதில்லை. பெற்றோர்களும் சரி வீட்டிலேயே இருக்கட்டும் அப்படின்னு போன கொடுத்துட்டு அவங்க வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. சிலர் போனில் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தால் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்து போயிடுவாங்க. ஆனால் சில விஷயங்களில் போன் நமக்கு பெரிதும் உதவியாகவும் உள்ளது. எப்படி என்றால்??
இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்து கொண்டே தான் இருக்கு. அதுல மிகவும் முக்கியமான இடம் இந்த மொபைல் போனுக்கு தான்!!! உதாரணமாக, நான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் போனில் மேப் பார்த்து சரியான இடத்திற்கு செல்கின்றோம்,.வியாபாரம் செய்பவர்கள் தங்களின் வியாபாரப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கின்றனர்.
நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் instagram, facebook மூலம் ரீல் செய்து அதனை பதிவிடுகின்றனர். இதன் மூலம் அவர்களின் நடிப்பு திறமை வெளிப்படுகிறது. ஆனால் சிலர் நடிப்பில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இதுபோன்ற செயல்கள் செய்கின்றனர். அவர்களும் சமூகத்தில் வரவேற்கப்படுகின்றனர். இன்ஸ்டாகிராம், facebook போன்ற சமூக வலைத்தளங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் அடிக்ட் ஆகிக்கொண்டே வருகின்றனர். எப்படியாவது தினமும் ஒரு ரிலீஸ் ஆவது போட்டு விட வேண்டும்!! அல்லது தினமும் ஏதாவது ஒரு புகைப்படம் ஆவது பதிவிட வேண்டும்!! என்று சிலர் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் இதில் கிடைக்கும் வருமானத்திற்காகவும், இதனால் ஏதாவது ஒரு நடிப்பிற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் இதில் வீடியோக்களை பதிவிடுகின்றனர். இன்னும் சிலர் ட்ரெண்டாக வேண்டும் என்று நினைத்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர்.
இன்னும் சிலர் நம்மை சுற்றி நடக்கும் சில விஷயங்களை இந்த உலகத்திற்கும், தெரியாத மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நினைத்து வீடியோக்களை பதிவிடுகின்றனர். சிலர் காமெடியாக ஏதாவது ரிலீஸ் போடுவது, அரசியல் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் என பல வகையில் வீடியோக்களை பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது!!!கேரளா மாநிலத்தில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசார் ஒரு பாடலுக்கு தங்கள் தலையை அசைந்து கொண்டு ஆடுவது போன்றும், அதன் பின்னால் இருந்து கைதிகள் அந்தப் பாட்டிற்கு ஆடிக்கொண்டே வருவது போன்றும் உள்ளனர். வீல் செய்யும் பொழுது இடையில் திருடர்கள் வருவதை பார்த்த போலீஸ் ஒருவர் வீடியோவை நிறுத்த சொல்லிவிட்டு இது போலீஸ் உடைய ரீலு, இதில் திருடனுக்கு என்ன வேலை செல்லுக்குள் போங்க!! அப்படின்னு திட்டிட்டு திருப்பி ரிலீஸ் பண்ண போறப்ப இல்ல வேண்டாம் எனக்கு மூட் அவுட் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லிறாரு!! இந்த வீடியோ இப்போ இணையத்துல வைரல் ஆகி கொண்டு வருகிறது!!! இருப்பினும் இந்த வீடியோ உண்மையில் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்டதா அல்லது ஏதேனும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவலும் தெரியவில்லை! ஆனாலும் போலீசார் தலை அசைத்த விதத்தை பார்ப்பதற்காகவே பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்