
பிடா மகேஸ்வரர் சிவலிங்கம் கோவில் வாரணாசியில் உள்ள மிகவும் ரகசியமான கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலில் சிவலிங்கத்தின் சுயமாக வெளிப்படுத்தப்பட்ட சுயம்பு என்று சொல்லப்படுகிறது.இங்கு அமைந்துள்ள பீடா மகேஸ்வரர் 40 அடி நிலத்தடியில் அமைந்துள்ளது. மேலும் இது மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சிவனை பக்கத்தில் சென்று பார்க்க முடியாது. அங்குள்ள சிவனை அங்கு உள்ள சுவரில் உள்ள துளையின் வழியாக மட்டுமே பார்த்து தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தக் கோவில் சிவன் ராத்திரி, ரங் பரி எகாதசி, மற்றும் குளிர் காலங்களில் வரும் திங்கட்கிழமை அன்று மட்டும்தான் திறக்கப்படும். ஆனால் ஆண்டு தோறும் அந்த சுவரில் வழியாக சிவனை தரிசிக்க முடியும். அதே சமயத்தில் வாரணாசியை பொறுத்தவரை இப்படி மறைக்கப்பட்ட கோவில்கள் பல இருக்கும். கோவிலுக்கு மேல் சில வீடுகளும் அமைந்திருக்கும். அந்த அளவுக்கு மிகவும் சாதாரணமாக பல மறைக்கப்பட்ட கோவில்கள் வாரணாசியில் எங்கும் காணப்படும்.
அப்படிப்பட்ட ஒரு மறைக்கப்பட்ட இடத்தில் தான் இந்தக் பிதா மகேஷ்வர் வாரணாசியின் ஷீட்லா தெருவில் வீற்றிருக்கிறார்.
சௌக் அல்லது சிந்தியா காட்டில் இருந்து நடந்தே இங்கு வரலாம். காட்டிலிருந்து கோயிலை அணுகினால், சித்தேஸ்வரி தேவி கோயிலைப் பற்றி உள்ளூர்வாசிகளிடம் கேட்டால், சித்தேஸ்வரியிலிருந்து அதே பாதையில் முன்னோக்கிச் செல்லவும், நுழைவாயிலில் மணியுடன் உங்கள் இடது பக்கத்தில் ஒரு குறுகிய தெருவைக் காணலாம். தெருவில் நுழைந்து கோவிலுக்கு அழைத்துச் செல்லும் பாதையில் செல்லுங்கள் என்று கூறுவார்கள், அப்படி குறுகிய சாலையில் நெருக்கமான இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்!
இக்கோவில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திறக்கப்பட்டாலும், ஆண்டில் எந்த நாள் வேண்டுமானாலும் சுவற்றின் மீது உள்ள துளையின் வழியாக சிவனை பார்த்து வழிபடலாம். அப்படி வழிபடுவதனால் பல மாற்றங்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுவதை கண்கூடாக உணர முடியும். ஆனால் அந்த குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும் போது சிவனை நேராக சென்று தரிசனம் செய்தால் பல நன்மைகள் நடக்கும். இந்த கிணற்றுக்குள் அமைந்திருக்கும் பிடா மகேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். உலகில் பல சிவன் கோயில்கள் மலைக்கு மேல் அமைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!!
ஆனால் முதன் முறையாக இப்படி கிணற்றுக்குள் அமைந்திருக்கும் சிவனைப் பற்றி கேள்விப்படுவது இதுவே முதலாகும். அந்த அளவுக்கு எங்கும் காண முடியாத சக்தி வாய்ந்த பீடம் மகேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவன் வாரணாசியில் தான் காட்சியளிக்கின்றார். வாரணாசிக்கு செல்ல வேண்டும் என்பது இங்கு பலரின் விருப்பமாக உள்ளது, அதிலும் இந்த பீடம் மகேஸ்வரர் ஆலயத்தையும், அதன் மர்மங்களையும், அந்த சக்தி வாய்ந்த சிவனைப் பற்றியும் அறிந்தவுடன் உடனே சென்று அந்த பீடம் மகேஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுகின்றது!! எங்கு சென்றும் நடக்காத வேண்டுதல்களும் இந்த பீடம் மகேஸ்வரரிடம் கேட்டால் அது விரைவில் நடக்கும் என்பது பலரின் நம்பிக்கையாகவே உள்ளது.
தற்போது இந்த கோவில் பற்றிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!! அதில், கிணற்றில் உள்ள அதிசய கோவில், இங்கு பீடம் மகேஸ்வரராக சிவன் காட்சியளிக்கின்றார். இந்த பீட மகேஸ்வரர் காசி விஸ்வநாதனுக்கு நிகரானவர் என்று வாரணாசியில் உள்ள மக்கள் சொல்கின்றனர். இந்த சிவன் மறைவாகவும் 40 அடி நிலத்தடியிலும் இருப்பதினால் ஆதி கால படை எடுப்பினால் பாதிக்கப்படாமல் உள்ளது. மேலும் இக்கோவில் சிவனின் வழிகாட்டுதலால் அவரின் மகனான முருகப்பெருமான் உருவாக்கியுள்ளார் என்று கந்தபுராணம் கூறுகின்றது என்றும் இங்கு தரிசனம் செய்வதினால் 20 தலைமுறைக்கு மேல் முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது என இக்கோவில் பற்றிய வீடியோ வைரல் ஆகி வருகிறது!!