பல சமூக நல் கருத்துக்களை உள்ளடக்கி எடுக்கப்படும் படங்களும், குறிப்பிட்ட விஷயத்தை தழுவி எடுக்கப்படும் படங்களும், ஜாதி மதம் தொடர்பான கருத்துக்களை முன் வைத்து எடுக்கப்படும் படங்களும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பேசுபொருளாக பார்க்கப்பட்டு அதன் மூலமாக, கிடைக்கப்பெறும் பிரமோஷன் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விடுகிறது என்றால் அதனை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. அதற்கு உதாரணமாக சில படங்களை சொல்லலாம். திரௌபதி, ருத்ரதாண்டவம், ஜெய்பீம், சமீபத்தில் வெளியான RRR என சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்போதெல்லாம் எந்த படத்தின் டீசர் வெளிவந்தாலும் அந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சியை வைத்தே எந்த கட்சியை தாக்கியிருக்கிறார்கள் எந்த மதத்தை தாக்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து விடுகிறது. உதாரணத்திற்கு தற்போது வெளியான பீஸ்ட் பட டிரைலரில் வரும் ஒரே காட்சியை வைத்து, நடிகர் விஜய் பிரதமர் மோடியை எதிர்க்கிறார் என்பது போல விஜய் ரசிகர்கள் பூகம்பத்தை கிளப்ப, அது விஜய்க்கு பயத்தைக் கொடுக்கும் அளவுக்கு சென்று, இப்போது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிக்கையும் விட்டு இருக்கின்றார்கள்.
கடந்த இரண்டு படங்களிலும் ஜாதி மதங்களை முன்னிறுத்தி கதை இடம் பெற்றிருந்ததால் அடுத்து வரக்கூடிய படமும் அதே போன்று இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கு. மேலும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த குறிப்பாக ஜெய்பீம் படத்தில், இடம்பெற்றிருந்த காலண்டர் குறியீடு காட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோகன் ஜி யின் அடுத்த படம் இருக்குமா இந்த கேள்வியும் சமூகவலைத்தளத்தில் அவருடைய ஆதரவாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் பதில் இயக்குனர் மோகன் ஜி அவர்களே சொன்னால்தான் தெரியவரும்.