24 special

டெல்லியில் முகாமிட்டுள்ள "ஆளுநர் மற்றும் அண்ணாமலை" ... என்ன நடக்கிறது ஆளும் கட்சி அதிர்ச்சி..!

Annamalai and rn ravi ,modi
Annamalai and rn ravi ,modi

தனிப்பட்ட பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று இருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.


புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்த அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை ஆளும் தரப்பு நம்பவில்லை உட்கட்சி விவகாரத்தை காரணமாக வைத்து டெல்லியில் ஏதேனும் முக்கிய விவாகரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஆளும் கட்சி வட்டாரத்தில் வலுவாக எழும்துள்ளதாம்.

இந்த சூழலில் டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் உள்துறை அமைச்சர், கல்வி துறை அமைச்சர் மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து சில தகவல்களை தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது, மேலும் தமிழகத்தில் அமைச்சர்கள் சிலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அமலாக்க துறை நடவடிக்கை போன்றவை குறித்தும் ஆலோசனை நடத்த ஆளுநர் டெல்லி சென்று இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் அரசியல் ரீதியாக முன்னெடுக்க கூடிய மாற்றம் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறாராம் குறிப்பாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தை கையில் எடுத்து தீவிரமாக விவசாய அமைப்புகளுடன் கை கோர்த்து போராட்டம் நடத்த அண்ணாமலை வியூகம் வகுத்துள்ளாராம்.

முல்லை பெரியாறு விவகாரம் என்பது தமிழகம்-கேரளா என இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இந்த அரசியலை முன்னெடுப்பது குறித்து மத்திய தலைமையின் ஆலோசனை தேவை என்பதால் அதற்கான முயற்சியை முன்னெடுக்க அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஆளுநர் ரவி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை என இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சூழல் ஆளும் கட்சியின் அதிகார வட்டத்தை ஆட்டம்காண செய்துள்ளதாம்.