24 special

சீன எல்லையில் ராடார்களை குவிக்கிறதா இந்தியா..!

india china boder
india china boder

லடாக் : இந்திய சீன எல்லையில் லடாக் மற்றும்  எல்லைப்பகுதிகளில் சீன துருப்புக்கள் போர் ஒத்திகையில்  வருகின்றன. மேலும் விமானதாக்குதல் ஒத்திகையிலும் ஈடுபட்டுவருவதால் எல்லைபகுதிகளில் பதட்டம் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.


சீன எல்லையில் உள்ள இந்திய துருப்புகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் DRDO என அழைக்கப்படுகி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்த ஆயுதங்களை கண்டறியும் ஸ்வாதி ரக ராடார்களை  வாங்குவதற்கு இந்திய ராணுவம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

1000கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியது.இந்த திட்டம் உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DRDO மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்வாதி வகை ரேடார்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன.

மேலும் முதல்முறையாக இந்த ஸ்வாதி ரேடார் ஆர்மீனியாவுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த ஸ்வாதி ஆயுதங்களை கண்டறியும் ரேடார்கள் 50 கிலோமீட்டர் எல்லைக்குள் மோர்டார்ஸ், ஷெல்கள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளிட்ட எதிரியின் ஆயுதங்களின் வேகம், தானியங்கி மற்றும் துல்லியமான இருப்பிடத்தை  குறிப்பிட்டு காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் இந்திய துருப்புக்கள் ரேடார்களை பயன்படுத்திவருகிறது. புதியதளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மேக் இந்த இந்தியா என கூறப்படும் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்பவர் என்பது கவனிக்கத்தக்கவிஷயம். மேலும் இராணுவத்திற்கு தேவையான பீரங்கிகள் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக்குண்டுகள் தயாரிப்பு இந்தியாவிலேயே ஆர்டர் செய்ய தளபதி கூறியிருப்பது மேக் இந்த இந்தியா திட்டத்தை மேலும் ஊக்குவித்துள்ளது.

பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பில் வேகமாக முன்னேறிவரும் இந்தியா அடுத்த கட்டமாக பீரங்கிகள் ஏவுகணைகள் ரேடார்களை ஐரோப்பா கண்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா தனது தயாரிப்புகள் சிலவற்றை ஏற்கனவே ஏற்றுமதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.