24 special

ரெக்சோனா பாட்டி..! நிறைவேறுவதற்கு முன்னரே போட்டி போட்டு அசிங்கப்பட்ட பாகிஸ்தான்!

Modi
Modi

நிறைவேறுவதற்கு முன்னரே இந்த வெற்றிக்கு காரணம் நாங்கள்தான் என பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் மற்றும் இந்நாள் பிரதமர் இருவரும் அடித்துக்கொண்டு தற்போது ரெக்சோனா பாட்டி கதையாக மாறி இருப்பதாக வேணுகோபாலன் என்பவர் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


சில தசாப்தங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் ரெக்ஸோனா பாட்டி என்ற இடுகுறிப்பெயர் கொண்ட ஒரு அம்மையார் இருந்தார். ரெக்ஸோனா சோப்பு வந்த புதிதில், நூறு சோப்பு கவர்களைக் கொடுத்தால் குலுக்கல் முறையில் தங்க நாணயமோ வெள்ளி நாணயமோ கிடைக்குமென்ற நம்பிக்கையில், வீடு வீடாக ஏறி ரெக்ஸோனா சோப்புக்கவர்களைச் சேகரித்ததோடு மட்டுமின்றி, லக்ஸ் மற்றும் லைப்பாய் சோப்பு உபயோகிப்பவர்களையும் சுயநலத்தினால் ரெக்ஸோனாவுக்கு மதம்மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். கடைசியில் அவருக்கு மிஞ்சியதென்னவோ ஒரு பெரிய கூடை நிறைய லைப்பாய் சோப்புக் கவர்கள் மட்டுமே! 

இதனால் அந்த மூதாட்டி பின்னர் ரெக்ஸோனா பாட்டி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். ட்விட்டரில் நேற்று FATF என்று கடனிஸ்தானிலிருந்து ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது, நிஜப்பெயர் இன்றளவும் தெரிந்திராத அந்த ரெக்ஸோனா பாட்டியின் வாழ்க்கை வரலாறு கண்முன் வந்து போனது.

Financial Action Task Force என்ற அமைப்பு, 2008 தொடங்கி இன்றளவிலும் கடனிஸ்தானை grey list-ல் வைத்துள்ளது. அதாவது, கறுப்புப்பணப்பரிவர்த்தனை, தீவிரவாத ஊக்குவிப்பு போன்ற குணாதிசயங்களுக்காக, கடந்த 14 ஆண்டுகளில் பலமுறை பரிசீலனை செய்து மூன்று முறை ’இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,’ என்று சிலபல நிபந்தனைகளை விதித்து தொடர்ந்து க்ரே-லிஸ்டில் வைத்திருந்தது.

இம்-தி-டிம்-கான் வாசீர்-ஏ-ஆஸமாகப் பொறுப்பேற்று தனது ‘கௌமுக்காக( நாட்டுக்காக) உருப்படியாக ஒரு விஷயம் செய்ததென்றால் இந்த FATF கண்காணிப்புப் பட்டியலிலிருந்து வெளியேற கொஞ்சம் நடவடிக்கை எடுத்ததுதான். கிட்டத்தட்ட எல்லா நிபந்தனைகளையும் நிறைவேற்றியதுடன், கடைசியாக மிச்சமிருந்த ஜமாத்-உத்-தாவா கும்பல் தலைவன் ஹஃபீஸ் பன்றி சயீத்துக்கும் சிறைத்தண்டனை விதித்து கிட்டத்தட்ட எல்லா தேவைகளையும் நிறைவேற்றியது. 

அதன்படி...நேற்று நடந்த FATF கூட்டத்தில், அனேகமாக கடனிஸ்தானை கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கி, ஒழிஞ்சு போ என்று பத்தி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காலை முதலே காணக்கிடைத்தது. அரசல் புரசலாக வெளியான செய்தியின் அடிப்படையில், ‘FATF விடுவித்து விட்டது. ஹை ஜாலி,’ என்று ஆக்கம்கெட்ட கூவைகள் ட்வீட்டுகளாகப் போட்டுத் தள்ளியதோடு, ஆளும்கட்சியும் இம்-தி-டிம்-கான் கட்சியும் ‘என்னாலதான் ஆச்சு,’ என்று குடுமிப்பிடி சண்டை வேறு போட்டுக் கொண்டிருந்ததுகள். பிறகு எனது அபிமான ஹீனா கர் ரபானி ஒரு ட்வீட் போட்டு, ‘ஆர்வக்கோளாறுல அடுப்புல தண்ணியைத் தெளிச்சிராதீங்கடா அப்ரசண்டிகளா!

அவங்களா வாயைத் திறந்து சொல்றவரைக்கும் எல்லாரும் வாயிலே சமோசாவை வைச்சு அடைச்சிட்டு சும்மாயிருங்க,’ என்று சொல்லியும், ஒரு பய கேட்கவில்லை. 

இறுதியாக...கடனிஸ்தானை இன்று விடுவிக்கவில்லை. நேரடியாகப் போய் ஆய்வு செய்துவிட்டு அப்பாலிக்கா சொல்றோம்,’ என்று FATF அறிக்கைவிட்டது. அதற்கே, ‘ஹையா, இந்தியாவின் சதியை முறியடித்து விட்டோம், FATF-லிருந்து விடுபட்டு விட்டோம்,’ என்று ஊடகங்களில் ஆளாளுக்குக் குதூகலத்தில் குதித்து கூரையில் மண்டை மோதிக் கொண்டிருக்கிறதுகள். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எதுவென்றால், 26/11-ல் தொடர்புடைய ஹஃபீஸ் சயீதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை! ஆனால், அது இன்னும் நிறைவேறவில்லை.போதாக்குறைக்கு அடுத்த FATF கூட்டம் அக்டோபரில் நடக்கவிருக்கிறது. அதற்குள், இந்தியா காஷ்மீரில் கடனிஸ்தான் பொறுக்கிகள் நடத்தியிருக்கிற அட்டகாசம், தீவிரவாத இயக்கமான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் என்ற அமைப்பு கராச்சி தேர்தலில் போட்டியிட அனுமதித்தது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவென்றே தொடங்கிய FBR என்ற அமைப்பை, ஷெபாஷ் ஷெரீஃப் ஆட்சிக்கு வந்தவுடன் நீர்த்துப்போக வைத்தது என்று பல விஷயங்களை எடுத்துச் சொல்லி மீண்டும் கடனிஸ்தானை கண்காணிப்புப் பட்டியலுக்குள் கொண்டுவந்து விடலாம் என்று கருதப்படுகிறது.

ஆக, வெறும் ரெக்ஸோனா சோப்புக்கவரை வைத்துக்கொண்டு பக்கத்து நாட்டுப் பாட்டிகள் பரவசமடைந்து கொண்டிருக்கிறதுகள்.  அக்டோபரில் ஆப்பு நிச்சயம் என்ற எதார்த்தம் அதுகளுக்குப் புரியவேயில்லை. சரி, அப்படியே இந்தியா ஒன்றுமே செய்யாவிட்டாலும் அல்லது எதையாவது செய்து தோற்று விட்டாலும்கூட, தற்போது கடனிஸ்தான் இருக்கிற நிலைமையில் இதனால் ஒரு புண்ணியமும் இல்லை என்பதுதான் கள எதார்த்தம். 

IMF -இடம் ஒரே ஒரு பில்லியன் டாலருக்காக, காலில் விழுந்து கெஞ்சிக்கூத்தாடிக் கொண்டிருக்கிறது கடனிஸ்தான். சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஐ.எம். எஃப் சந்தோஷப்படுமளவுக்கு இல்லை என்று ப்ளும்பெர்க், சிட்டி ஆகியவை அதிருப்தி தெரிவித்திருக்கின்றன. போதாக்குறைக்கு, CPEC எனப்படுகிற China Pakistan Economic Corridor-க்குக் கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்திருப்பது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை மூட்டும் என்பதால், ஐ.எம்.எஃப் கடன் தருவது சந்தேகம்தான் என்று அங்கலாய்க்கிறார்கள் கடனிஸ்தான் நிபுணர்கள்.

கையில் இருக்கிற 9 பில்லியன் டாலரை வைத்துக் கொண்டு கோதுமை வாங்குவதா, பெட்ரோல் வாங்குவதா என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறதுகள். இது இப்படியிருக்க, ரஷியா - இந்தியா இடையிலேயான International North South Transport Corridor (INSTC) என்ற புதிய வழித்தடம் மூலம் இரான் வழியாக, மும்பைக்கு பொருட்கள் வந்து சேர்ந்திருக்கின்றன.

வழக்கமான கடல்வழித்தடத்தில் 40-45 நாட்கள் எடுத்துக்கொள்ளுகிற பயணத்தை இனி 20-25 நாட்களிலேயே முடித்துக் கொள்ளலாம் என்பதால், பொருட்கள்(குறிப்பாக பெட்ரோலியப் பொருட்கள்) இந்தியாவுக்கு விரைவாக வந்து சேர்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு இந்தியாவும் ரஷியாவும் இனி இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்துகொள்வதற்கான மூஸ்தீபுகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. 

அதுகள் அற்பசந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இங்கே ஒரு மிகப்பெரிய சாதனை சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் கடனிஸ்தானில் கதறல் சத்தம் சற்று அதிகமாகவே கேட்கும் என்பதே இப்போதைய தகவல். பாகிஸ்தான் என்பதைத்தான் வேணுகோபாலன் கடனிஸ்தான் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.