24 special

அமலாக்கத்துறை "அதிரடி" அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி பறி போகிறதா? அண்ணாமலை குறிப்பிட்டது யார்?

Senthil balaji
Senthil balaji

முன் எப்போதும் இல்லாத அளவாக அமலாக்கத்துறை முழு அதிரடியில் செயல்பட்டு வருகிறது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கணக்கில் வராத சொத்துக்களை பறிமுதல் செய்து வருவதுடன், பலரது சொத்துக்களை முடக்கியும் வருகிறது, தேவை பட்டால் கைது செய்தும் விசாரணை நடத்துகிறது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் அமைச்சர்கள் ஆளும்கட்சி பிரமுகர்கள் சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர், இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு அமலாக்கத்துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருப்பதாகவும், அவர் இரண்டு வாரம் நேரம் வேண்டும் என பதில் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் அண்ணாமலை கநேற்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.



அந்த தகவல் அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது மேலும் யார் அந்த தமிழக அமைச்சர் என்ற கேள்வியும் எழுந்தது இந்த சூழலில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம் உண்டாகி இருக்கிறது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் அமலாக்க துறையிடம் வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விரைவில் அமலாக்கத்துறை கையில் எடுத்து செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அமலாக்கத்துறை வசம் இருப்பதாகவும், வழக்கு விசாரணையின் போதே செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. (இது குறித்த செய்தியை முதலில் வெளியிடுவது உங்கள் TNNEWS24 ) இன்றைய தினம் சென்னையை மையமாக கொண்ட MGM குழுமத்தின் 200 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை நேற்றைய தினம் எங்களை கைது செய்வதற்கு முன்னர் பல அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் என குறிப்பிட்டு இருந்த சூழலில் முதல் நபராக அதில் தமிழகத்தை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தகவல் - டெல்லி சிறப்பு செய்தியாளர் ஸ்ரீராம் சுப்பிரமணி.