தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் கட்டப்படுள்ள திமுக அலுவலகத்தை திறந்துவைக்க டெல்லி சென்றுள்ளார், இன்றைய தினம் பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பிரதமரிடம் அளித்துள்ளார், அவற்றை பெற்றுக்கொண்ட பிரதமர் கோரிக்கைகளை பரிசீலனை செய்து பின்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் அப்போது உக்ரனில் இருந்து மாணவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார் மேலும் துபாய் பயணத்தின் போது வெளியுறவுத்துறை தமக்கு செய்த பயண உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்.
இந்த சூழலில் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு சென்றார் ஸ்டாலின் அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர், இந்த சூழலில் சோனியா காந்தியும் ஸ்டாலினை சந்திக்க திமுக அலுவலகத்தில் காத்திருந்தார் வந்திருந்த ஸ்டாலினை வணக்கம், தான் தற்போது உங்களை பார்த்து வணக்கம் சொல்ல வந்திருக்கிறேன்.
சனிக்கிழமை கட்சி அலுவலக திறப்பு விழாவில் சந்திப்போம் என ஆங்கிலத்தில் தெரிவித்தார் சோனியா. இந்த பேச்சுவார்த்தைக்கு இடையில் தயாநிதிமாறன் டிஆர்.பாலு, ஆ ராசா உள்ளிட்ட எம்.பி களை தாண்டி கனிமொழி போன்றரை பின்தள்ளி முதல்வர் ஸ்டாலினுக்கு அருகில் சென்று நின்றார். அதாவது டெல்லியில் என்னுடைய அரசியல்தான் என சொல்லாமல் சொல்ல ஸ்டாலின் அருகிலேயே தயாநிதி மாறன் செல்வதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தயாநிதி மாறன்- கனிமொழி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் மன கசப்பில் இருப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தயாநிதி மாறன் ஸ்டாலின் அருகில் செல்ல கனிமொழியை பின்னுக்கு தள்ளி முன்னே சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Delhi | #TamilNadu Chief Minister and DMK President MK Stalin meets Congress President Sonia Gandhi at the Parliament.
— NDTV (@ndtv) March 31, 2022
"I just came to say 'vanakkam'. I will see you on Saturday," Sonia Gandhi said to the DMK president. pic.twitter.com/zYvsHaPHPi