24 special

அத்தனையும் நாடகமா? அமைச்சர் பதவி மாற்ற பட்டியல் செய்தி காரணமா?

Palanivel thiyagarajan, dr.saravanan
Palanivel thiyagarajan, dr.saravanan

தமிழக அரசியலில் புயலை கிளப்பிய செருப்பு வீச்சு சம்பவம் இப்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது, இராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த சென்ற பழனிவேல் தியாகராஜன் அருகில் இருந்த பாஜக மாவட்ட தலைவராக இருந்த சரவணனை பார்த்து என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியதாக வாக்கு வாதம் ஏற்பட்டது.


இந்த சூழலில் இதனை அருகில் இருந்த பாஜகவினர் கவனிக்க வாக்குவாதம் முற்றியது ஒரு கட்டத்தில் வெளியே சென்ற தமிழக அமைச்சர் தியாகராஜன் காரினை மறைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அரங்கேறியது, இந்த சூழலில் தியாகராஜனை கடுமையாக சாடிய சரவணன் நேற்று இரவே பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கோரியதாக செய்திகள் வெளியானது.

இந்த சூழலில் ஏன் சரவணன் திடீர் என அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது, முதலில் ஒரு பக்கம் சரவணன் மிரட்ட பட்டு அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க படுவதாக திமுகவில் உறுதி கொடுத்ததாக கூறப்பட்டது, இந்த சூழலில் தற்போது மற்றொரு தகவல் பரவி வருகிறது.

விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருக்கிறதாம் அதில் பல்வேறு அமைச்சர்களின் இலாகா மாற்றி அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது, பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதிதுறையை மாற்றி அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி கொடுக்க தீர்மானித்து இருந்தனராம்.

இந்த தகவல் தெரியவரவே சரவணனை வைத்து இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்று சந்தேகத்தை கிளப்பியுள்ளனர் மேல் மட்ட வட்டாரங்கள், மொத்தத்தில் அரசியலில் தொடர்ச்சியாக கட்சி மாறுபவர்கள் செல்வாக்கை இழப்பது உறுதி என்பதால் வாயை மூடி மவுனியாக மாறி சில நாட்கள் வேடிக்கை மட்டும் பார்க்க சரவணன் தரப்பு முடிவு செய்து இருக்கிறதாம்.

செருப்பு வீசப்பட்ட சம்பவம் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் எனவும், இதன் மூலம் PTR தனது முக்கிய அமைச்சரவை இலாகாவை தக்க வைப்பதுடன், சரவணன் திமுகவில் முக்கிய பதவியை பெற வாய்ப்பாக அமைந்து இருப்பதால், உண்மையான பிண்ணனி குறித்து முழுமையாக அறிய பாஜக சார்பில் விசாரணை குழுவும் அமைக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாம்.