24 special

இரவோடு இரவாக கட்சி மாறிய சரவணன் "போனில்" மிரட்டியது யார்?

Madurai saravanan
Madurai saravanan

தமிழக அரசியல்களம் மாறி மாறி  திமுக vs பாஜக என நாளுக்கு நாள் மாறி வருகிறது, பாஜகவில் இருந்து அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவராக பதவி வகித்த சரவணன் விலகுவதாக அறிவித்தார், குறிப்பாக பாஜக செய்யும் மத அரசியல் பிடிக்கவில்லை என கூறி சரவணன் விலகுவதாக தெரிவித்தார்.


இது உண்மையில் பல பாஜகவினரை மட்டுமின்றி செய்தியாளர்கள் உட்பட பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது சரியாக நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சரவணன், PTR பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சனம் செய்தார், குறிப்பாக PTR அவரது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரட்டும் அவரை எதிர்த்து தேர்தலை சந்திக்க தயார் என்றார்.

ஒரு படி மேலே சென்று மதுரை மக்களின் உணர்விற்கு மதிப்பு அளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சரவணன் பேசி இருந்தார், இதை பார்த்த பலர் சில்லறையை சிதறவிட்டனர். ஆனால் அன்று இரவே சரவணன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்டு பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இந்த சூழலில் நேற்று மாலையில் இருந்து இரவிற்குள் சரவணன் மனம் மாற சென்னையில் திமுகவை தற்போது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கும் முக்கிய நபர் சரவணனை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார், நீங்கள் உடனடியாக பாஜகவில் இருந்து விலகவேண்டும், நேரடியாக அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் மதுரையில் உங்கள் மருத்துவமனை எவ்வாறு செயல்படும் என பார்ப்பீர்கள் என அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு நீங்கள் பாஜகவில் இருந்து வெளியேறினால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் போட்டியிட சீட் கொடுப்பதாகவும், விரைவில் மதுரை மாவட்டத்தில் புதிய கட்சி ரீதியிலான மாவட்டம் ஒன்றை உருவாக்கி மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுப்பதாகவும் அந்த நபர் உறுதி கொடுத்து இருக்கிறார். இதை அடுத்து சரவணன் உடனடியாக திமுகவிற்கு மாறும் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சரவணன் பாஜகவில் இருந்து விலகியது உண்மையில் பாஜக தலைமைக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது, அதே நேரத்தில் இந்த நேரத்தில் சரவணனின் உண்மை முகம் வெளிவந்ததை நினைத்து பாஜக தலைமை சற்று அமைதி அடைந்து இருக்கிறது, விரைவில் சரவணன் மூலம் பாஜகவில் பொறுப்புகளை பெற்ற பல நபர்களை நீக்கும் பணியை கட்சி தலைமை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதில் முதற்கட்டமாக மதுரையில் சரவணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது உண்மையாக கட்சியின் விசுவாசிகளுக்கும் நீண்ட நாட்களாக பாஜகவின் ஆதரவாளர்களாக இருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே சரவணன் போன்ற சந்தர்ப்ப வாதிகள் பாஜகவை பயன்படுத்தி கொள்வதை தவிர்க்க தற்போதைய தேவையாக இருக்கும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னணி தலைவர்கள் என பாஜகவில் இணைந்த பலர் இப்போது பாஜகவிற்கு ஆதரவாக பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்களோ இல்லையோ, பாஜகவில் இணைந்து பதவியை பெற்று தங்களை முன்னிலை படுத்திக்கொண்டு வேறு கட்சிக்கு தாவி விடுகிறார்கள். இது போன்ற பல தலைவர்கள் மாற்றத்தை பார்த்த கட்சி பாஜக என்பதாலும், தேசிய அளவில் இது போன்ற உள்ளடி வேலைகளை சந்தித்து வளர்ந்து ஆட்சியை பிடித்த கட்சி பாஜக என்பதால் சரவணன் பாஜகவில் இருந்து விலகியது பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல தயாராகி விட்டதாம் பாஜக.

மொத்தத்தில் தமிழக அரசியல் களம்  திமுக VS பாஜக என்றே சுழல தொடங்கி இருப்பது மேற்கு வங்கம் போன்று தமிழகத்திலும் பாஜக செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்பதே முன்னணி அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.