24 special

மத்திய அரசு மீது பழி போடுவது நியாயமல்ல?....தமிழக அரசுக்கு வலுத்து வரும் கண்டனம்!

Stalin, census
Stalin, census

முதல் முதலாக பிகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து முடித்த நிலையில் இது போன்று நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கண்டனம் வலுத்து வருகிறது. இலையில் தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று திமுகத்தில் உள்ள கட்சி தலைவர்கள் ஆளும் திமுக அரசு விரைந்து நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள திமுக எம்பி கனிமொழியிடம் யிடம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வலியுறுத்திய நிலையில் அதற்கு அவர் அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று நானும் கோரிக்கை விடுவதாக தெரிவித்தது நகைச்சுவையாக இருந்தது.


எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளும் இது குறித்து தமிழக அரசுக்கு தொடர்ந்து சாதி வாரி கணக்கெடுப்புவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஆளும் அரசோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்று மழுப்பி வருகிறது. இதில் மத்திய அரசை உள்ளே இழுத்து அரசியல் செய்து வருவதாகவும் விமர்சனம் எழுந்தது.  இது தொடர்பாக நேற்று  “சென்னையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் திருவுருவ சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என கோரியிருந்தார். மேலும்,  இட ஒதுக்கீட்டை முறையாக கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் அடங்கிய  குழுவை அமைக்க வேண்டும்" என்று ஸ்டாலின் கூறினார். 

இதற்கு பலரும் கண்டனம் கொடுத்து வர தொடங்கியுள்ளனர், பீகாரில் மத்திய அரசை எதிர்பார்க்கவில்லை, கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் டிசம்பர் 8ம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்குவதாக தகவல் வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில், தன்னை நோக்கி வரும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசின் பக்கம் முதல்வர் திருப்பி விட முயல்கிறாரோரா என்றுதான் என்ன தோன்றுவதாக விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.  மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பிஹார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உதாரணமாக இருக்கும்போது, திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பேசும் முதல்வர், தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை வைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்களிடம் மத்திய அரசு மீது தவறு இருப்பதாக சுட்டி காட்டி வாக்குகளை பெறலாம் என்பது ஏற்புடையதல்ல என்று வேறு பேச்சு எழுந்துள்ளது. ஏன் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு மும்முரம் காட்டுவதில்லை என திமுக கூறுவது “மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மத்திய அரசின் வேலை. அந்த வேலையை மாநில அரசு செய்தால், அதற்குச் சட்ட அங்கீகாரமும் எதுவும் இல்லை" என்கிறார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இதே பாட்டை படி வருகிறது. இப்படியே மழுப்பி வாந்தால் தேர்தலின் போது மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.