தமிழகத்தில் அவப்போது குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஆட்சியில் இருப்பது திமுக இதனாலயே குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. குறிப்பாக 2021ம் ஆண்டு ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்திலேயே வெட்டி கொலை செய்தல் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாதிய வன்கொடுமை காரணமாக கையில் அரிவாளை எடுத்து வெட்டி கொலை செய்தல் பழங்குடி இளைஞர்களை துன்புறுத்துதல் போன்ற செயல்கள் அரங்கேறியள்ளது. இதனை திமுக கண்டும் காணாமல் இருப்பதாக குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டது.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தது. "தமிழகத்தில் 1967-க்கு பிறகு திராவிட சித்தாந்தங்கள் உடைய கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கிறது. திராவிட சித்தாந்தங்கள் அதிகமாக பேசக்கூடியது திமுக தான். அண்மைக்காலமாக திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சனாதன ஒழிப்பு குறித்து பேசுகிறார்கள். திமுக 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார்கள். 2021-ம் ஆண்டுக்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடக்குமுறைகளும், தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் நடந்துள்ளது. சராசரியாக தமிழகத்தில் 800-1000 வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறும். ஆனால் 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மூன்று மடங்காக அதிகரித்து 2,500 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
அதிலும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றம் செய்யக்கூடியவர்கள் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் சமூகத்தை சேந்தவர்களாக உள்ளனர். தென் தமிழகம் கல்வி, தொழில், போக்குவரத்து துறைகளில் பின்தங்கியுள்ளது. அந்த பகுதிகளில் அமைதி நிலவினால் தான் தொழில் துவங்க முன்வருவார்கள். மனக்கரை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட கிருமிகள் எல்லாம் மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். 20-க்கு மேற்பட்டவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளது. அவர்கள் வெளியில் நடமாடி வருகிறார்கள். 30 காவலர்களில், 27 காவலர்கள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் யாரும் புகார் தெரிவிக்க முடியவில்லை.
புகார் கொடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் எங்கு சமூகநீதி உள்ளது. தென் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சூழல் நிலவுகிறது. 15 மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து நடைபெறும் சாதி வன்கொடுமைகள், படுகொலை சம்பவங்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக கவனம் செலுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஒரு கொலை அல்லது தாக்குதல் என்ற நிலை நீடிப்பதால் தென் தமிழக மக்களுக்கு அச்சத்தை போக்கக்கூடிய வகையிலும், நம்பிக்கையூட்டக்கூடிய வகையிலும் சிறிது காலத்திற்காவது துணை ராணுவ படை தென் தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும்", என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.