மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்வியும் அவர் சொன்ன காரணங்களும் தான் தற்போது செந்தில் பாலாஜியை மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலினையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து 11வது முறையாக டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம் திரிவேதி, சதிஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, மருத்துவ அறிக்கையை சமர்பித்தார். தொடர்ந்து, ”தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே செந்தில் பாலாஜியின் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதி பெலா எம் திரிவேதி, “தற்போது உள்ள சூழ்நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது அப்பெண்டிக்ஸ் சிகிச்சை போன்றதுதான். நீங்கள் குறிப்பிடுவது போல எதுவும் சீரியஸாக இல்லை” உடல்நிலை நன்றாக இல்லை என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது
மேலும், “நீங்கள் வழக்கமான ஜாமீன் நடைமுறையை பின்பற்றலாமே. ஏன் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்கிறீர்கள்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்ப பெற்று விட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர். மேலும் மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜிக்கு நிச்சயம் ஜாமின் கிடைத்துவிடும் ஒன்றும் கவலை படாதீர்கள் என பலமுறை திமுக தலைமை ஆறுதல் வார்த்தை கூறிய நிலையில் இனி அவருக்கு உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்து விட்டது இனி செந்தில் பாலாஜிக்கு ஆயுசு முழுவதும் சிறை தான் எனவும் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே செந்தில் பாலாஜி வெளியே வர வாய்ப்பு இருப்பதாக மிக மூத்த வழக்கறிஞர்கள் தெளிவாக கூறி விட்டார்களாம்.
எனவே அரசியல் வாழ்க்கையே முடிவிற்கு வந்து இருப்பதால் இனியும் திமுகவை நம்பி பிரேஜனம்இல்லை எப்படியாவது ஜாமின் கிடைக்க பாஜக தலைவர்களை தொடர்பு கொள்ள செந்தில் பாலாஜி முயற்சி எடுக்க ஆயத்தம் ஆகி விட்டாராம், ஆனால் பாஜக தரப்பிலோ உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேஆகவேண்டும் என செந்தில் பாலாஜிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில் உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை நிராகரித்து இருப்பதால் அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜியை வைத்து இருந்தால் பெரும் சிக்கல் உண்டாகலாம் என்பதால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவிற்கு ஸ்டாலின் வந்து இருக்கிறாராம்.