Tamilnadu

திமுக அரசு ’தலிபானிஸ்த்தை’ நோக்கிப் பயணிக்கிறதா? மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் போட்டு தாக்கிய கிருஷ்ணசாமி..!

Krishnasamy and stalin
Krishnasamy and stalin

தமிழக சுகாதாரதுறை அமைச்சரின் செயல்பாட்டிற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் மருத்துவருமான கிருஷ்ணசாமி இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-


சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே.!'மகரிஷி சரக் சபத்' உறுதிமொழியில் இல்லாததை திரித்துச் சொல்லலாமா?கல்விக்கூடங்களிலும் அரசியல்.!திமுக அரசு ’தலிபானிஸ்த்தை’ நோக்கிப் பயணிக்கிறதா? ஏப்ரல் 30 ஆம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் ஏற்றுக்கொண்ட மகரிஷி சரக் சபத் உறுதிமொழி 'டி-ஸ்டாக்கிஸ்ட் மாடல்' அரசால் சர்ச்சை ஆக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக உயர் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற உறுதிமொழி நிகழ்ச்சிக்கு மத்திய அல்லது மாநில அமைச்சர்களை அழைப்பது வழக்கம் இல்லை. ஆனால் மதுரை மருத்துவக் கல்லூரியில் எதற்காக மாநில அமைச்சர்கள் போனார்கள்? எனத் தெரியவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் பிரிவின் மாநாடு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானம் பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களில்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே. அதன் நீட்சியாகவே மதுரை மருத்துவக் கல்லூரியில் மகரிஷி சரக் சபத் உறுதிமொழிக்கு எதிராக ‘திராவிட விஷ வித்தை’ விதைக்கும் செயல் அமலாக்கப்பட்டு இருக்கிறது என்று ஐயுறத் தோன்றுகிறது.

கடந்த 100 வருடத்தில் உலகத்தின் எந்த நாட்டிலும் உறுதிமொழி ஏற்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளானதில்லை. மகரிஷி சரக் சபத் உறுதிமொழியானாலும், ஹிப்போகிரிட்டீஸ் உறுதிமொழியானாலும் அது மாணவர்களின் வகுப்பறைக்குள் நடக்கக்கூடிய சாதாரண சம்பவம். மருத்துவ பணிகளில் ஈடுபடக் கூடியவர்கள் மனித நேயத்துடனும் சுய கட்டுப்பாட்டுடன் நடந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, நவீன மருத்துவத்தின் தந்தையாகப் போற்றப்படக்கூடிய ஹிப்போகிரேட்டீஸ் அவர்களால் ஏறக்குறைய 2300 வருடங்களுக்கு முன்பு, அதாவது கிமு 460 ஆண்டுமுதல் கிமு 375 ஆம் ஆண்டு வரை பத்துக்கும் மேற்பட்ட வாக்கியங்கள் கொண்ட உறுதிமொழியை வடிவமைத்து உள்ளார்.

முதலில் அது கிரேக்க மொழியில் மட்டுமே எழுதப்பட்டது. கிபி 1500-ல் ஜெர்மன் மொழியிலும், கிபி 1700-ல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, நவீன மருத்துவம் ஒரு வடிவம் பெற்ற பிறகு, (International Medical Association) சர்வதேச மருத்துவ கழகம் 1948, 1968, 1983, 2006 ஆம் ஆண்டுகளில் ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. 

உறுதிமொழியை ஏற்பதன் மூலம் எந்த தேசத்தில் மருத்துவர்கள் இருந்தாலும் குறைந்தபட்ச ஒற்றுமையும், கட்டுப்பாடும் உருவாக வாய்ப்பளித்தது. மருத்துவம், வேளாண்மை, இலக்கியம் அல்லது தொழில் உலகத்தின் பல நாடுகளில் ஒரே நேரத்தில் தோன்றியிருக்கலாம். ஆனால் அவை தேசத்திற்குத் தேசம் பல மாறுபாடுகளுடனே இருக்கும்.

கிரேக்க நாடு இன்னும் வித்தியாசமானது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அப்பல்லோ - Apollo கடவுள், நோயைக் குணப்படுத்துவதற்கு ’எஸ்கலேப்பியஸ் – Asclepius’ கடவுள், கல்விக்கு ’டேஸ்கலோஸ் - Daskalos ’ கடவுள், காதலுக்கு ’எராஸ் – Eros’ கடவுள் என பல தெய்வங்களை வழிபட்டது மட்டுமின்றி, அந்த தெய்வங்கள் தங்கள் உடனே வாழ்வதாகவும் கருதினார்கள்.

ஹிப்போகிரேட்டீஸ் நவீன மருத்துவத்தின் தந்தையாக இருந்தாலும், அந்த தேச பண்பாட்டோடு பின்னிப் பிணைந்தே இருந்திருக்கிறார். அதனால்தான் Hippocratic Oth ” I Swear by Apollo the Physician and Aesculapius and by Hygeia and Panacea and by all the gods and goddesses, making them my judges, that this mine oath will I fulfill as far as power and discernment shall be mine: Him who taught me this art will I esteem equally with my parents; he shall partake of my livelihood, and, if in want, shall share my substance. I will regard his offspring as my brothers, teaching them this art without fee or stipulation if they shall wish to learn it” என Apollo மற்றும் Asclepius தெய்வங்களின் மீது ஆணையாக உறுதிமொழி ஏற்பதாக அது தொடங்குகிறது.

சரக் சபத் அவர்களின் உறுதிமொழி ஏற்புடையது இல்லையெனில், அப்பல்லோ மற்றும் எஸ்கலேப்பியஸ் தெய்வங்களின் மீது எடுக்கும் உறுதிமொழி திமுக அரசுக்கு ஏற்புடையது ஆகுமா? மேலும் தனக்கு மருத்துவத்தை கற்றுக் கொடுக்கக்கூடிய குருவை தன்னுடைய தந்தையாகக் கருதி சுய கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வோம் எனவும் அது உறுதியேற்க வைக்கிறது.

அதேபோல் ”ஒரு நோயாளிக்கு நல்லது செய்வேனொழிய இம்மியளவும் தீங்கு செய்ய மாட்டோம் எனவும், ஒரு நோயாளியின் நோய் தன்மையை வேறு எவருடனும் பகிர மாட்டோம் எனவும், லாப நோக்கம் கருதி எவ்விதமான தவறான சிகிச்சையையும் அளிக்க மாட்டோம்” போன்ற வாக்குறுதிகளை உள்ளடக்கியதே சரக் சபத் உறுதி மொழியாகும். ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழி பல நாடுகளில் அதன் தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் நம்முடைய பாரத தேசத்தில் ஹிப்போகிரேட்டீஸ் காலத்திலேயே பிறந்து, இந்தியாவினுடைய மண் வாசனைக்கு ஏற்ப மருத்துவத்துறைகளை உருவாக்கிய மகரிஷி சரக் சபத் அவர்களின் உறுதிமொழியின் திருத்தியப் படிவத்தை இந்திய தேசிய மருத்துவ கழகத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளது.

ஹிப்போகிரேட்டீஸ் நவீன மருத்துவத்தின் தந்தை. அவர் கிரேக்க தேசத்தைச் சார்ந்தவர். மகரிஷி சரக் சபத் அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் தோற்றுவாயாக விளங்கியவர். கிரேக்கத் தேசத்துக்கு முந்தைய வரலாறு கொண்டது இந்தியப் பண்பாடும் வரலாறும். கிமு 300-ல் தொடங்கி அலெக்சாண்டர், இஸ்லாமியர்கள், செங்கிஸ்கான், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோருடைய படையெடுப்புகளால் நம் தேசம் அடிமைப்படுத்தப்பட்டு நமது பாரம்பரிய பண்பாடுகளும், அரிய வளர்ச்சிகளும் கூட அழிக்கப்பட்டுவிட்டன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பாக இந்தியா கை நெசவு தொழிலில் கொடிகட்டிப் பறந்த தேசம். ஓவியத்தில், கட்டிடக்கலையில், வேளாண்மை தொழில் என பல்வேறு துறைகளிலும் நாம் மிளிர்ந்து இருந்த காலம் உண்டு. ஏறக்குறைய 2000 வருடங்களுக்கு முன்பே, கடல் வணிகத்தில் சிறந்து விளங்கி ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்த வரலாறுகளையும், சிலப்பதிகாரத்தில் நாம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதற்கும் பெரும் ஆதாரங்கள் உண்டு.

எனவே, அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப இந்திய மருத்துவ முறையும் வளர்ந்து தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அன்னிய படையெடுப்பால் நம்முடைய பண்டைய வரலாறுகள், வளர்ச்சிகள் அழிக்கப்பட்டதை போல நம்முடைய பாரம்பரிய சிகிச்சை முறையும் அழிக்கப்பட்டு விட்டன. அதனுடைய மிச்ச சொச்சமாக ஆயுர்வேதமும் சித்த சிகிச்சை முறைகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன.

பாரத தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. நமது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசு மகரிஷி சரக் சபத் அவர்களுடைய உறுதிமொழியை அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் உறுதி ஏற்க வேண்டுமென அறிவுறுத்தியதன் பெயரில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர். அதில் என்ன தவறு உண்டு? மகரிஷி சரக் சபத் 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். அன்று இருந்த சூழ்நிலைக்கு ஏற்ப சரக் சபத் அவர்களின் உறுதிமொழிகளில் சில வாசகங்கள் இடம் பெற்றிருக்கலாம்.

இன்றைய பார்வையில் கண்ணோட்டத்தில் அந்த வாசகங்கள் ஏற்புடையதாக இருக்காது. எனவேதான் நம்முடைய தேசிய மருத்துவ கழகம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அதை மறுசீரமைப்பு செய்து பின்வருமாறு வெளியிட்டு இருக்கிறது.

Dwij (twice born)"! Facing the east in presence of the holy fire and the learned people take the oath that:* During the period of study, I shall live a life of self-control, piety and discipline. Submitting myself to my Guru (teachers) with complete dedicated feeling. I shall act like a son/daughter for his/her welfare and happiness. My action shall be guarded, service oriented and free from indiscipline and envy. In my dealings, I shall be patient, obedient, humble, constantly contemplative and calm. I shall aim my full efforts and ability towards the desired goal of my Guru. As a physician, in order to gain success and fame and earn money I shall always use my knowledge for the welfare of living mankind.

* I shall always be ready to help patients, even when I am extremely busy and tired. I shall not harm any patient for the sake of money or selfish gain nor shall I entertain a desire for other women/men or wealth. Immorality should not figure even in my thoughts.

* My dress ought be decent yet impressive and personality confidence inspiring. I shall always use sweet, pure, appropriate, pleasant, truthful, beneficial and polite words and using my past experience, I shall act keeping in mind the time and the place.* I shall constantly endeavour to accomplish the newest development of knowledge.

* I (especially a male doctor) shall treat a woman only in the presence of her husband or a near relative.* When examining a patient, my discretion, attention and senses should be concentrated on the cure of the disease. I shall not make propaganda about the confidential matters regarding patients and their family.

* Though an authority (on my subject), I shall not display my knowledge (and skill) egoistically as by it even near ones may feel insulted.**A Dwij Means twice born because for the first time one takes birth bodily from his/her mother and second time takes birth spiritually with the education and publication influenced by Guru.

Any person of any caste or sex can become aDwij and a doctor. Considering it, appropriate amendments have been made in this main substance of the original exiensive Orth of Charak. Every medical student and doctor should take this Oath and put it on his/her working table. Charak Oath is far more extensive.

’Dwij’ என்று குறிப்பிட்டுள்ளவை பிராமணர்களைக் குறிக்காது. எந்த ஜாதி மதத்தையும் குறிக்கக் கூடியது அல்ல. தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதை முதல் பிறப்பாகவும், பின் மருத்துவம் பயின்று இன்னொரு புதிய மனிதனாக இந்த சமுதாயத்தில் பிறந்து வருவதை இரண்டாவது பிறப்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஜாதி, மத, இன, பாலினமானாலும் மருத்துவராகலாம் என்பதே திருத்தப்பட்ட வாசகமாகும்.

இதுகுறித்து இன்றைய (04.05.2022) சட்டமன்றத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் “பசு மற்றும் பிராமணர்களுக்காக மருத்துவர்கள் தொழுகை செய்ய வேண்டும்; மன்னரின் எதிரிகளுக்கும், மன்னனை வெறுப்பவர்களுக்கு, மக்களால் வெறுக்கப்படுபவர்களுக்கும் நான் மருத்துவம் பார்க்க மாட்டேன்; தீயவர்களுக்கும் தவறான வழியில் செல்பவர்களுக்கும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும் மருத்துவம் பார்க்க மாட்டேன்” என்று திருத்தியமைக்கப்பட்ட மகரிஷி சரக் சபத் மொழியில் வாசகங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


 ஆனால், National Mediacal Council-ன் திருத்தியமைக்கப்பட்ட சரக் சபத் உறுதிமொழியில் அது போன்ற வாசகங்கள் இல்லை. அப்படியிருக்கையில் மகரிஷி சரக் சபத் உறுதிமொழியில் இல்லாததை அமைச்சர் சொல்லலாமா? வேண்டுமென்றே திட்டமிட்டு தேசிய மருத்துவக் கழகத்தின் மகரிஷி சரக் சபத் அவர்களின் உறுதிமொழியை இன்றைய திமுக அரசு திரித்துப் பேசுவதும், உள்நோக்கம் கற்பிப்பதும், ஒரு உயர்நிலை கல்விக் கூடத்தில் அரசியலைப் புகுத்துவதும் அத்துமீறல்; அராஜகம்; அடாவடித்தனம்.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு நிகராகவே இவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்க்கத் தோன்றுகிறது.’மருத்துவ கல்வி கற்கக்கூடிய மாணவப்பருவத்தில் சுயக்கட்டுப்பாடுடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்வோம்; மருத்துவராக்கும் ஆசிரியர் பெருந்தகையிடத்தில் மதிப்புடனும் மரியாதையுடனும் அந்த ஆசான் இடத்திலே அவர்களுடைய பிள்ளைகளைப் போல நடந்து கொள்வோம்’ என்று மாணவர்கள் உறுதி ஏற்பதில் என்ன குற்றம் கண்டு விட்டார்கள்? பள்ளியோ, கல்லூரியோ, பல்கலைக்கழகமோ, உள்நாடோ, வெளிநாடோ எந்த நிறுவனத்திலும் ஒருவர் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் அதில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றவர் இடத்தில் அந்த மாணவன் முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டால் மட்டுமே அதைக் கற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கிட வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு ஏன் வந்தது?

மகரிஷி சரக் சபத் அவர்களுடைய உறுதிமொழியின் மூல கருவிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட உறுதிமொழிகளை நமது தேசிய மருத்துவ கழகம் மாணவர்களுக்கு அளித்திருக்கிறது. திருத்தப்பட்ட சரத்துக்களில் எந்த குறைகளும் சொல்ல முடியாதவை. ஆறாவதாகச் சொல்லக்கூடிய உறுதிமொழி குறித்து தேவையற்ற சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். ஒரு ஆண் மருத்துவர் ஒரு பெண் நோயாளியைப் பரிசோதிக்கும் பொழுது, துணைக்கு திருமணமானவராக இருந்தால் அவருடைய கணவரையோ, உற்றார் உறவினரையோ வைத்திருக்க வேண்டும் என்பதில் என்ன குற்றம் இருக்கிறது? பல நேரங்களில் பெண் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கின்ற போது ஆண் மருத்துவர்கள் மீது புகார் எழுந்தது இல்லையா?


இன்னும் சொல்லப்போனால் இந்த உறுதிமொழி மருத்துவர்கள் சர்ச்சைகளில் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், பொதுவெளியில் நம்பிக்கையூட்டுவதற்கும் சாலப் பொருத்தமான உறுதி மொழியாகும்.இந்தியாவில் இருக்கக்கூடிய சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப, மகரிஷி சரத் சபத் அவர்களுடைய உறுதிமொழி மறுசீரமைக்கப்பட்டு இருக்கிறது.இக்காலங்களில் அதிக கார்ப்பரேட் மருத்துவமனைகள் துவக்கப்படுவதும், லாபம் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்படுவதும், மலிவாக விளம்பரங்கள் செய்வதும், அபரிவிதமான கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன. எல்லோரும் மருத்துவர்கள் இடத்தில் தான் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் அனைவராலும் குறை சொல்லப்படக்கூடிய ஒரே துறை மருத்துவத்துறையும் மருத்துவர்களும் தான். அது அரசு மருத்துவராக இருந்தாலும், தனியாராக இருந்தாலும் சரி கடும் விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுவது மருத்துவத்துறையே. இந்த உறுதிமொழிகளை எல்லாம் முறையாக கடைப்பிடிக்காததன் விளைவாகவே மருத்துவத் துறைக்கு எதிரான எண்ணங்கள் பரப்பப்படுகின்றன.

மருத்துவர்களும் மருத்துவத் துறையும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழி மருத்துவர்களுக்கான கட்டுப்பாடுகளை முதன்முதலில் உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதையும் சமப்படுத்தி நவீனப்படுத்தப்பட்டுள்ள மகரிஷி சரக் சபத் அவர்களுடைய உறுதிமொழியை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக் கொண்டதில் எந்த தவறும் கிடையாது. ஏதோ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செய்யக்கூடாத தவறைச் செய்து விட்டதைப் போல இப்பொழுதுதான் மருத்துவ கல்விக்குள் நுழைந்து இருக்கக்கூடிய இளம் மாணவர்களை அச்சுறுத்துவதும், மருத்துவக் கல்லூரி முதல்வரை நீக்கம் செய்வதும் அடாவடியின் உச்சக்கட்டம். இதை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசை ஏற்கனவே ’ஒன்றிய அரசு’ என்று சுட்டிக்காட்டிய பொழுதே தமிழ்நாடு பிரிவினைக்கு வித்திடுகிறது என்று நாம் எச்சரித்தோம். இன்று அவர்கள் தங்களுடைய சுயரூபத்தை மருத்துவக் கல்லூரியிலும் காட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டை திமுக ஆட்சியில் தாலிபான்களாக்க மாற்ற முயற்சி செய்கிறார்களா? என்பதுதான் கேள்வி. 'விநாச காலே விபரீத புத்தி என்றொரு பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப, இன்றைய திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அனைத்திலும் வலிந்து குற்றம் காண்கிறது. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அனைத்தையும் திரித்து சித்தரிக்கிறார்கள். 

மருத்துவ உலகம் ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழியைப் பல மாற்றங்களுக்கு உட்பட்டே ஏற்றுக்கொண்டுள்ளது. அதே சமயத்தில் ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழியின் மூலக்கரு மாறாமல் உள்ளதா? என்று மட்டும் தான் நாம் பார்க்க வேண்டும்.ரக் சபத் அவர்களின் திருத்தப்பட்ட உறுதிமொழியில் ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழியின் முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கி, இன்றைய காலத்திற்கேற்ப பல அம்சங்கள் உள்ளதால் அதை மருத்துவ மாணவர்கள் ஏற்றதில் எந்த தவறும் இல்லை. சரக் சபத் அவர்களின் திருத்தப்பட்ட உறுதிமொழி இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவக் கல்லூரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்விதமான அரசியல் தலையீடும் தேவையற்றது. எல்லாவற்றையும் அரசியல் படுத்திப் பழக்கப்பட்ட திமுக தேவையில்லாமல் மருத்துவ படிப்பிலும் தனது மூக்கை நுழைக்கிறது. இது ஆபத்தான போக்காகும்.

எனவே, மத்திய அரசும், இந்திய மருத்துவ கழகமும் இந்த விஷயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும் என மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.