24 special

SFIO அமைப்பு களத்தில் இறங்குகிறதா...!ஆடிப்போய் கிடைக்கும் செந்தில் பாலாஜி வட்டாரம் ...!

Senthil balaji
Senthil balaji

அமலாக்கத் துறையை விட அதிகமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை வேகமாக நெருங்கும் ஒரு விசாரணை அமைப்பால் திமுக தரப்பு ஆட்டம்கண்டுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் அதிலும் வேலை வாங்கிதருகிறேன் என பணமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அது பற்றிய குற்றச்சாட்டு அமலாக்கத்துறையிடம் இருந்தது. பிறகு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் என இரண்டு பதவிகளை வகுத்து மிகுந்த பொறுப்பு வாய்ந்த நபராக வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜி இதிலும் ஊழலில் ஈடுபட்டார் எனவும் டாஸ்மார்க் துறைகளின் ஊழல் பற்றிய சம்பவங்கள் விடீயோக்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மார்க் ஊழல் விஷயம் ஐடி வரை சென்று சோதனையில் ஈடுபட்டனர் ஐடி அதிகாரிகள்.


அதற்குப் பிறகு போக்குவரத்து துறையில் அமைச்ச செந்தில் பாலாஜி செய்திருந்த ஊழலை பற்றி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு பிறகு அமலாக்க துறையும் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு அவரை விசாரணை செய்ய கைது செய்யும் அளவிற்கு சென்றது. ஆனால் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். 

இருப்பினும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையை விட மற்றும் ஒரு பெரிய விசாரணை அமைப்பு நெருங்கி வருகிறது என்ற தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனையின் பொழுது அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்கியதுன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விஷயம் மத்திய அரசு வரை சென்று அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக சிஐஎஸ் எஃப் வீரர்களை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்க துறை நடவடிக்கைக்கு அடுத்து எஸ் எஃப் ஐ ஓ எனப்படும் தீவிர மோசடி விசாரணை அமைப்பை  இதில் களமிறக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் நிதித்துறை கட்டுப்பாட்டில் இயங்குவது. எஸ் எஃப் ஐ ஓ அமைப்பு என்பது மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறையின் கீழ் இயங்குவது பெரிய நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் சட்டவிரோதமான பண பரிமாற்றங்கள் மற்றும் ஒயிட் கலர் குற்றங்கள் போன்றவற்றை தீவிரமாக விசாரித்து அதனை நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவிடும் அல்லது மத்திய அரசின் உதவி மூலம் அமலாக்க துறையிடம் தான் சேகரித்த தகவல்களை ஒப்படைப்பது இதன் பணியாகும். இந்த உயர் அதிகாரத்தை பெற்றுள்ள எஸ் எஃப் ஐ ஓ அமைப்புதான் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இறங்கலாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதாவது செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் விசாரணை அவரோடு நின்று விடாது தீவிர விசாரணைக்கு பின் மேல் மட்டம் வரை செல்லும் என்பது தான் டெல்லி அதிகாரிகள் அவரது விவகாரத்தில் குறிப்பிடும் கூடுதல் தகவல் என்று கூறுயிருந்தார். 

அண்ணாமலையின் இந்த அறிவிப்பின் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்வதற்கு எஸ் எஸ் ஐ ஓ அமைப்பு கண்டிப்பாக இறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தெரிந்து செந்தில்பாலாஜி தரப்பு ஆடிப்போய் இருக்கிறது.