24 special

விஜய்க்கு மறைமுக தூது விட தொடங்கிய திமுக....!கட்சியில் இணைவாரா விஜய்....?

Actor vijay ,mk stalin
Actor vijay ,mk stalin

அரசியல் வருகையை விஜய் மறைமுகமாக அறிவித்துள்ள காரணத்தினால் விஜய்க்கு மறைமுக தூதுவிட துவங்கிவிட்டது திமுக கூட்டணி!சமீபத்தில் நடைபெற்ற முடிந்த பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை அளித்து கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடிகர் விஜய் தனது நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் முழுவதுமாக கலந்து கொண்ட நடிகர் விஜய் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் தனித்தனியாக பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி பரிசுத் தொகையை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் இறுதியில் பேசிய நடிகர் விஜய் நீங்கள் தான் நாளை வரும் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் அதோடு அசுரன் படத்தில் வரும் படிப்பை மட்டும் யாராலும் எடுத்துச் செல்ல முடியாது என்று டயலாக்கை கூறி இந்த வசனம் தான் இப்படி ஒரு நிகழ்வை நான் ஏற்பாடு செய்ய காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பேசிய விஜய் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடவே கூடாது இதனை மாணவர்கள் தான் தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் ஒரு தொகுதியில் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எவ்வளவு ரூபாய் அவர்கள் கொடுக்க வேண்டும், செலவழிப்பது அவ்வளவாக இருந்தால்!  அதற்கு முன்பு அவர்கள் எவ்வளவு வருமானத்தை ஈட்டி இருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார். சமூக வலைதளங்களில் இன்றைய தினங்களில் அதிகமான போலி செய்திகள் பரவி வருகிறது இதனால் பெரியார், அம்பேத்கார், காமராஜர் போன்றவர்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்றார். நடிகர் விஜயின் இந்த பேச்சுகளுக்கு அண்ணாமலை மற்றும் சீமான் போன்றவர்கள் வரவேற்பு அளித்தனர். மாணவர்களை கௌரவிக்க ஏற்பாடு செய்த நிகழ்வில் அரசியல் கலந்த சில கருத்துக்களை விஜய் பேசியிருப்பது அவரது அரசியல் பிரவேசத்திற்கு இந்த நிகழ்வு முக்கிய திட்டமாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே கூட்டணி கட்சிகளிடம் நமக்கு விரிசல் இருப்பதால் விஜயின் அரசியல் பிரவேசத்தை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த திமுக கூட்டணி கட்சிகள் விஜய்யை தங்களுடன் வைத்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது என தகவல்கள் கிடைத்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது, அதில் எம் பி விஜய் வசந்த் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார், 'அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் திமுக கூட்டணியில் விஜய்யை இணைக்க நாங்கள் தயாராக உள்ளோம், அவர் அரசியலில் நுழைந்தால் காங்கிரஸ் திமுக கூட்டணியில் அவரை இணைக்க தலைமை தான் முடிவு செய்யும் முன்னதாகவே பலர் கலைத்துறையில் இருந்து வந்து சாதித்து வருகின்றனர்' என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சி என்று கூறினாலே தமிழகத்தில் தற்போது அதிமுகவை கூறுவதை விட பாஜக என்று கூறும் தரப்பினர்தான் அதிகமாக உள்ளனர் எனவே தற்போது ரசிகர்கள் பட்டாளத்தில் திளைத்திருக்கும் நடிகர் விஜய்யை தம் பக்கம் திருப்பிக் கொண்டால் அது நமக்கு சாதகமாக இருக்கும் பிரதமர் பதவியை பிடிப்பதற்கு வழி வகையாகவும் இருக்கும் என்று காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு அதன் செயல்பாடு ஆகவே எம் பி விஜய் வசந்த் வாயிலாக அந்த கருத்து வந்துள்ளதாக தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

முன்னதாக திமுக மற்றும் விஜய் இரு தரப்பினருக்கும் சில மோதல்களும் கருத்து வேறுபாடு நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்த நிலையில் திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒவ்வொருவரும் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று தங்கள் பக்கம் அவரை வைத்துக் கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.