
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டம் ஒருவழியாகத் தொடங்கிவிட்டது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மொழியில் சொல்ல வேண்டுமானால், ‘தேர்தலுக்கு இன்னும் ஒன்பது அமாவாசை இரவுகளே இருப்பதால்...’, இப்போதே அரசியல் வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்திருக்கிறது தமிழ்நாடு. ஒருபுறம், ‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரசாரச் சுற்றுப்பயணத்தில் இறங்கிவிட்டார். பாஜகவும் பூத்வலிமை இயக்கத்தை ஆரம்பித்துவிட்டது. இவர்களுக்கிடையே, வரும் செப்டம்பரிலிருந்து தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ளது. திமுக மீதான அதிருப்தி அதிமுக பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. மேலும் கூட்டணியை உடைப்பதற்கு திமுக பல வழிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக ஆதரவு ஊடகங்கள் பல வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பாஜக கூட்ட்டணி வைக்கும் கட்சிகள் காணாமல் போய்விடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வருகிறது. தோல்வி பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் .
இதற்கிடையில் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினருக்கு கூடுதல் சீட் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற ஆசை துளிர் விடத் துவங்கியுள்ளது. இது திமுகவை கடுப்படைய செய்துள்ளது. ஆனாலும், கூட்டணியிலிருந்து தி.மு.க., கழற்றிவிடுமோ என்ற அச்சமும் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது.அதனால் தான், சீமான், விஜய் போன்றோரை விமர்சிக்காமல், 'பா.ஜ.க - அ.தி.மு.க.,வை அழித்து தமிழகத்தில் கால் ஊன்றிவிடும்...' என்று பிதற்ற துவங்கியுள்ளார், வி.சி.க தலைவர் திருமாவளவன்.அதுமட்டுமா கூட்டணி கட்சிகள் அதிக சீட் கேட்டால் அந்த கட்சிகளை உடைக்கவும் தயாராகி விட்டார்கள். திமுகவினர். மதிமுக கம்யூனிஸ்ட் திருமாவின் முக்கிய மூன்று பேரிடம் திமுக தனியாக பேச ஆரம்பித்துவிட்டதாம். இத தெரிந்து கொண்டுதான் திருமா பாஜக அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார். என்ற செய்தி வெளியாகி உள்ளது. மதிமுகவில் இருப்பவர்களை தட்டி தூக்கி பல்ஸ் பார்த்துள்ளது திமுக அதற்கு எந்த ரியாக்சனும் இல்லாததால் ஆப்ரேசன் விடுதலைச்சிறுத்தைகள் கையில் எடுத்துள்ளது.
தமிழக அரசியலை உற்று நோக்கி வருவோருக்கு திமுக வரலாறு நன்றாகவே தெரியும். கடந்த 1967ல் தமிழக சட்டசபை தேர்தலில், எட்டு கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடித்தது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் காங்., தலைநிமிரவே இல்லை.
இரு திராவிடக் கட்சிகளை நம்பித்தான் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறது விசிக., 1952ல் -பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரசுடன் போட்டியிட்டு தமிழகத்திலிருந்து, எட்டு எம்.பி.,க்களை அனுப்பிய, அன்றைய ஒன்றுபட்ட கம்யூ., கட்சியை, இன்று வெறும் அறிக்கைவிட்டே காலம் தள்ளும் கட்சியாக மாற்றியிருக்கும் பெருமை, எந்தக் கட்சியை சேரும்?கருணாநிதியின் வாரிசு அரசியலால் வெறுப்புக்குள்ளாகி, 1994-ல் தி.மு.க.,விலிருந்து விலகி, தனிக்கட்சி துவங்கிய வைகோ, இன்று அதே தி.மு.க., வெற்றிக்காக உழைப்பதுதான் தன் தலையாய கடமை என்று பிதற்றுகிறார் என்றால், ம.தி.மு.க., என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டிருக்கும் ராஜதந்திரி யார்?
'தி.மு.க.,வின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டியே தீருவேன்...' என்று ஆவேசமாகப் புறப்பட்ட உலகமகா நடிகர் கமலஹாசனை, சாதுர்யமாக வளைத்துப்போட்டு, ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டின் வாயிலாக மக்கள் நீதி மையத்தை ஓரங்கட்டியது எந்தக் கட்சி?அடுத்த தேர்தலுக்குள் கமலஹாசன் தன் கட்சியை தி.மு.க.,வுடன் இணைத்துவிடுவார் என்பது வேறு விஷயம்!தமிழகத்தில் வி.சி., உட்பட எந்தக் கட்சியையும் வளரவிடாமல், தன் ஆக்டோபஸ் கரங்களால் சுற்றி வளைத்து, கபளீகரம் செய்து கொண்டு இருப்பது எவர் என்று திருமாவளவன் தன் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்!