24 special

சனாதனத்தின் விளைவு கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது?

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

நாடளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் திமுக உடனான கூட்டணி குறித்து யோசித்தது முடிவு எடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ததெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது,  மீண்டும் பாஜக தலைமையிலான பிரதமர் மோடி ஆட்சி வெல்ல கூடாது என்று எண்ணி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என முடிவெடுத்த பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களளுடன் பேசி ஒன்று சேர்த்தார் நிதீஷ் குமார். 28 கட்சிகளை ஒன்றிணைத்து "இண்டியா" என பெயரும்சூட்டினர்.


அதன் பின் கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து பாட்னா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஒன்று கூடி, இந்த கட்சிகளின் தலைவர்கள் கொண்டு ஆலோசனை நடத்தினர்.இண்டியா கூட்டணி வலுவடைந்த நிலையில் தான் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது, கூட்டணியில் இருக்கும் முதலமைச்சர் உதயநிதி மற்றும் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஒரு வழியாக சமாதானம் படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.   இதற்கிடையில் தமிழ்நாட்டில் பாஜவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதனால் தமிழக காங்கிரசில் மட்டுமின்றி டெல்லி உள்ள காங்கிரஸ் மேலிடத்திலும் லேசான சலனத்தை ஏற்படுத்தியது. திமுக தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் மழைகார்ஜூன் கார்க்கே பொது செயலர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் தமிழக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, 'அதிமுகவுடன் கூட்டணி இல்லை'  என தெரிவித்தனர். தொடர்ச்சியாக திமுகவுடன் கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தது. அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்போது நாங்கள் ஐந்து மாநில தேர்தல் குறித்து ஆலோசித்து வருகிறோம் அதில் நான்கு மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினார். 

தமிழகத்தில் திமுகவுக்கு லேசான சறுக்கல் இருப்பதாக, டெல்லிக்கு சமீபத்தில் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனிடம் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறியுள்ளார்களாம். இதனால தான் மல்லிகார்ஜுன கார்கே திமுக உடன் கூட்டணி குறித்து 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவெடுப்பதாக தெரிவித்த்துள்ளார். அதிமுகவுடன் இப்பொது கூட்டணி இல்லை என்றாலும், டிசம்பர் மாதம் தான் இது குறித்து அக்கட்சி தலைமை முடிவு எடுக்குமாம். ஒரு கதவு மூடப்பட்டால், மறுகதவு நிச்சயமாக திறக்கும் என, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் இருந்தாலும் உதயநிதி கொஞ்சம் சனாதனம் குறித்து விளையாட்டாக பேசாம இருந்திருந்தால் காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்றும் பேசி புலம்பி வருகின்றனர் திமுகவின் முக்கிய புள்ளிகள்.