24 special

திமுக தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறது.......பாஜக தலைவர் காட்டம்!

annamalai,mkstalin
annamalai,mkstalin

தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். பல நாடுகளுக்கு நார் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்நிலையில் வெள்ளை வகைப்பாட்டிலில் இருந்து ஆரஞ்சு பிரிவுக்கு மாற்றப்பட்டதால் தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வெள்ளை கைப்பாட்டுக்கு மாற்ற வேண்டுமென அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தனர். இது குறித்து அரசு ஆலோசித்து தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  தற்போது அரசு தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருப்பது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிப்பிவிட்டு இருப்பது" "வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை, திமுக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 10/11/2021 அன்று ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல், தென்னை நார் தொழில்துறைக்கு மட்டுமின்றி, தொழிலாளர், உற்பத்தியாளர் குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்சாரத்தைத் துண்டித்தது இந்த மக்கள் விரோத திமுக அரசு. 

திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால்,  அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல்,  மின்கட்டண மானியம் கிடைக்காமலும், அதிகப்படியான மின் கட்டண உயர்வாலும்,  தென்னை நார் தொழிற்சாலைகள் இயக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர்கள் மற்றும், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது. 

திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாட்டை, கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று, வெளியிட்ட அறிக்கையில் அம்பலப்படுத்தியிருந்தோம். மேலும், தேசிய கயிறு வாரியம்,  மற்றும் தென்னை நார் தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள், இந்த அரசாணைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவுடன், மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது போல் நடித்த திமுக அரசு, தற்போது வேறு வழியின்றி,தென்னை நார் தொழிலை, மீண்டும் வெள்ளை வகைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்காக, ஒரு தொழில் துறையையே சீர்குலைத்து, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, தற்போது தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருப்பது, மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. மீண்டும் இது போல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று, அரசைக் கேட்டுக் கொள்கிறேன்". என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காணொலியில் அவர் கூறியிருப்பது, அன்னைக்கு இந்த அரசு தான் வெள்ளை நிறத்தில் இருந்து, சிகப்பு நிறத்திற்கு மாற்றினார்கள். அன்று அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கோடி கணக்கில் கலக்சனை போட்டார்கள். தற்போது தேர்தல் நெருங்குவதால் மாட்டிகிட்டோம் என்று தெரிந்து, மக்கள் அனைவரும் கோபத்தில் இருப்பதால் அவர்களை திசை திருப்பவே மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர் வெள்ளி நிறத்திற்கு மாற்ற கோருகின்றனர். இதுபோல ஒரு நகைச்சுவையை இந்தியாவில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். மாற்றி மாற்றி பொய் சொல்வது திமுகவால் மட்டும் தான் முடியும் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.