தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திமுக கட்சிக்கும் பிரச்சனைகள் ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கிவிட்டன.
சில நாட்களுக்கு முன்பாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி அவதூராக பேசி சர்ச்சையை கிளப்பினார், அதனை தொடர்ந்து வட மாநிலங்களில் பல முக்கிய தலைவர்கள் மற்றும் பாஜகவினர் அனைவரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.
மேலும் I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் பல தலைவர்களும் சனாதனத்தை மதிக்கும் நிலையில் அதை கூட உணர்ந்து கொள்ளாமல் இடதுசாரிகளின் விரித்த வலையில் விழுந்த உதயநிதி ஸ்டாலின் விழுந்துவிட்டதாகவும், தற்போது இந்திய கூட்டணியிலிருந்து திமுகவை விலக்கும் அளவிற்கு உதயநிதியின் பேச்சு அமைந்துவிட்டதாகவும் தேசிய அளவில் பேசப்பட்டது...
இந்நிலையில் டெல்லியில் சில I.N.D.I.A கூட்டணி மூத்த தலைவர்கள் அனைவரும் எப்படியாவது திமுகவை இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட வேண்டும் என்று வருவதாகவும், அடுத்தடுத்த கூட்டங்களில் திமுகவை மேடையில் ஏற்றினால் வட மாவட்டங்களில் அதுவே பாஜகவிற்கு சாதகமாக போய்விடும் என்றும் யோசித்து வந்த நிலையில் எப்படியும் திமுகவை I.N.D.I.A கூட்டணி தள்ளி வைத்துவிடும் எனவும் அடித்து கூறப்பட்டது.
மேலும் இதன் விபரீதத்தை உணர்ந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேலும் இது பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று திமுகவினருக்கு எச்சரித்ததாக தெரிகிறது, இந்நிலையில் தமிழகத்தில் திமுகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன் ஒருபகுதியாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டையில் 29.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை மற்றும் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முன்னாள் நிதி துறை அமைச்சர் பா சிதம்பரம் சென்றிருந்தார் மாங்குடி எம்எல்ஏ மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து ஆகியோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ப.சிதம்பரம் பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் என்ற விபரத்தையும் எந்தெந்த பகுதிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர் என்ற விவரத்தையும் ஆசிரியர்களிடம் கேட்டபோது தேவகோட்டை பகுதி உட்பட சுற்றுவட்டார பகுதிகள் இருந்து மாணவர்கள் அனைவரும் வருகின்றனர் என்று கூற அப்போது தேவகோட்டையில் பள்ளி இல்லையா என்று மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இது குறித்து விசாரித்தபோது தற்போது தான் தேவகோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறினர், இது மட்டுமில்லாமல் தேவகோட்டை நகராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலைப்பள்ளி கேட்டு மக்கள் போராட்டத்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று வேதனையோடு தெரிவித்தார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இவ்வாறு திமுக அரசை விமர்சித்து முன்னாள் நிதியமைச்சர் பேசியதால் இனிமேலாவது தேவ கோட்டையில் உயர்நிலை பள்ளி கொண்டு வருவதற்கு திமுக தரப்பு முயற்சி செய்யும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கூட்டணி கட்சியை அவ்வளவு சீக்கிரம் விமர்சிப்பவரல்ல ப.சிதம்பரம் ஆனால் இப்படி திமுக அரசை விமர்சித்து அதுவும் மக்கள் மத்தியில் பேசியது கண்டிப்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட புகைச்சலே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.