சில மாதங்களாகவே அரசு மருத்துவமனையில் வந்து சேரும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு பல உயிரிழப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன என செய்திகள் அதிக அளவில் வருகின்றன.
அண்மையில் கூட கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தவறான முறையில் சிகிச்சை அளித்ததால் அந்தப் பெண் பாதிக்கும் நிலை ஏற்பட்டது இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை மீதும் மருத்துவர்கள் மீதும் பல கண்டனங்கள் அந்த ஊர் மக்களால் எழுப்பப்பட்டு வந்தது, மேலும் கர்ப்பிணிப் பெண் என்ன பச்சிளம் குழந்தையை கூட விட்டு வைக்கவில்லை மருத்துவர்களின் அலட்சிய குறைவால் பச்சிளம் குழந்தைக்கு தவறான ஊசியை செலுத்தியதால் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் கை பாதிக்கப்பட்டது இதனால் அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அந்த குழந்தையின் தாய் போராட்டத்தில் குதித்தார்..
இப்படி அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக பல மருத்துவர்களின் கவனக்குறைவால் பல இறப்புகள் ஏற்பட்டு வருவதற்கு முக்கிய காரணமே சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களின் அலட்சியமான நிர்வாகம்தான் என்று அரசியல் வட்டாரங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது.
இப்படி தொடர் விமர்சனங்கள் எழுந்த காரணத்தினால் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து கொண்டு தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்காமல் அலட்சியமாக இருந்து வந்ததாக கூறி அவரது அமைச்சர் பதவியை பறிக்கும் முயற்சியில் தற்போது திமுக தலைமை இறங்கி இருப்பதாக வேறு சில அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது...
இது மட்டுமில்லாமல் மருத்துவர்கள் வேறு மா சுப்பிரமணியனுக்கு எதிராக போராட்டம் நடத்தியது வேறு அவரது மதிப்பை திமுக அரசு மத்தியில் குறைத்துள்ளது எனவும் திமுக தலைமை யோசித்தது...மேலும் பதவியை பறிப்பதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அவ்வப்போது மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரடியாக சென்று பல ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
மேலும் அந்த ஆய்வின் போது ஸ்கேன் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனமான கிருஷ்ணா டைகனாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் பொது மக்களிடம் இருந்து ஸ்கேன் செய்வதற்கு 2500 ரூபாய் பெற்றதை இந்த ஆய்வின் மூலம் தெரிந்து கொண்ட மாசுபிரமணியன் அது தொடர்பாக பல விசாரணைகளை நடத்திய போது 10 பேரில் ஏழு பேரிடமிருந்து 2500 ரூபாய் வசூலித்தது தெரியவந்தது இந்நிலையில் உடனடியாக தனியார் நிறுவனம் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
மேலும் தேனி மருத்துவமனையில் புதிய எம் ஆர் ஐ ஸ்கேன் கருவியை கொண்டு வரவும் அதற்கான பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது போன்ற ஆய்வினை இவர் தொடர்ந்து மேற்கொண்டு இருந்தால் அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்ட மக்களின் பாதிப்புகளை தடுத்திருக்க முடியும் தனது பதவியை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அலட்சியமாக இருந்ததால் தான் தற்போது அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டன என விமர்சனங்கள் எழுந்துள்ளன...
இதன் காரணமாகத்தான் அமைச்சர் சுப்பிரமணியன் அமைச்சர் பதவியை பறிக்கலாம் என திமுக தலைமை யோசித்ததாகவும் இதனால் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு திமுக தலைமை பதவியை பறித்து விடுமோ என்ற பயத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அரசு மருத்துவமனை ஆய்வு என இறங்கி வேலை பார்ப்பதாக தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.