24 special

அரசாங்கம் இருக்கிங்களா? இல்லையா கதறிய அதிதி பாலன்

mk stalin adithi shankar
mk stalin adithi shankar

கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் வங்க கடலில் உருவான மிக்ஜம் புயலின் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பொழிந்தது. இந்த நான்கு மாவட்டங்களில் சென்னை மாவட்டம் இப்புயலால் பெரும் பாதிப்பை சந்தித்தது சாலைதோறும் பாலங்கள் தோறும் சுரங்க பாதைகள் தோறும் குடியிருப்பு பகுதிகள் தோறும் ஏரிகள் தோறும் பொது கட்டிடங்கள் தோறும் மழை நீர் தேங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 


சென்னை மக்கள் பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தண்ணீர் உணவு பால் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டனர் மழை நின்றும் இன்னும் சில பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் மக்கள் தவித்து வரும் நிலைமையே தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மக்களின் நிலவரம் குறித்தும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய அரசு அவ்வப்போது கண்காணித்து வந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் 561.29 கோடி ரூபாய் ஒதுக்கி அந்த திட்டத்திற்கு ஒப்புதலும் அளித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இன்று சென்னை வருகை புரிந்து சென்னை மக்களின் பாதிப்பை ஆய்வு செய்தார். மேலும் மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். இதற்கிடையில் ஹெலிகாப்டர் மூலம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ நாத் சிங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள்வதற்கு மத்திய அரசு மாநில பேரிடர் மீட்பு பணிக்கான நிதியின் கீழ் தமிழகத்திற்கு 450 கோடி அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சென்னைக்கு வந்து பாதிக்கப்பட்டு இடத்தை ஆய்வு செய்த உடனே இந்த அறிவிப்பாளர் வெளியாகியுள்ளது.

அதாவது மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தில் வெள்ள நிவாரணத்திற்காக ரூபாய் 1011.29 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தமிழக முதல்வருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் இடையேயான உரையாடல்கள் பற்றிய தகவல் தற்போது  கசிந்துள்ளது. அதாவது அமைச்சர் ராஜ்நாத் சிங் தரப்பில் மத்திய அரசு தமிழகத்திற்காக நிதி ஒதுக்க தயாராக உள்ளது, ஆனால் மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என மத்திய அரசின் நிதி உபயோகப்படுத்தப்பட்ட முழு விவரமும் அறிக்கையாக கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம், அதனை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மத்திய அரசு ஏன் இந்த செக் தமிழக முதல்வரிடம் வைத்தது என்றால் ஏற்கனவே சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 4000 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார் ஆனால் தற்போது சென்னை மக்கள் படும் பாதிப்புகளை பார்க்கும் பொழுது 4000 கோடி ரூபாயா அதில் பாதி கூட செலவழிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மேலோங்கி இருப்பதாலும் அந்த 4000 கோடி ரூபாய் எங்கே என்ற கேள்விகளும் எழுந்துள்ளது, இதனால் மத்திய அரசு தரப்பில் தமிழகத்தில் வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 1011.29 கோடி ரூபாய்க்கு முறையாக கணக்கு கேட்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இனி திமுக அரசை மத்திய அரசு கண்டிப்பாக கண்காணிக்கும் எனவும் தகவல்கள் கசிகின்றன.