மழை வெள்ளத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் நிவாரப் பணிகள் எதுவும் கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் மழைநீர் வடியாத வண்ணம் உள்ளது இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மழை நீரில் தங்களின் பல ஆவணங்களை இழந்து தங்களுக்கென்று இருக்கும் இருசக்கரம் நான்கு சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கி பழுதாகி இதனை எப்படி சரி செய்வது காயலாங்கடைக்கு தான் செல்லும் போல! இன்சூரன்ஸ் கம்பெனி கிட்ட கொடுத்தா எவ்வளவு தருவாங்க நியாயமான தொகை நமக்கு கிடைக்குமா எப்படி இன்சூரன்ஸ் கம்பெனி கிட்ட சொல்றது அதை எப்படி நம்புவான்! நாங்க தரணுமா என்று கேட்டுவிட்டால் என்ன பண்றது இது போன்ற தயக்கங்கள் அனைத்திற்கும் இந்த வீடியோ மூலமா மழை வெள்ளத்துல சிக்கின வாகனங்களை இன்சூரன்ஸ் மூலமா எப்படி எடுக்குறதுன்னு சொல்றோம்...!
அதாவது உங்களது வாகனம் மழை ஏற்பட்ட வெள்ள நீரால் மூழ்கி விட்டது அல்லது மழை நீரிலே வாகனமானது அடித்து சென்று விட்டது என்றால் பதட்டமும் வேண்டாம் பயமும் வேண்டாம் பொறுமையாக இருந்து இப்ப சொல்லப்போற நடவடிக்கைகளை எல்லாம் பண்ணிடுங்க...முதலில் காரை கண்டறிந்து உங்கள் கார் அருகே சென்று புகைப்படம் ஒன்று எடுக்க வேண்டும்! அதை தவிர காரின் கதவை திறக்கவோ அல்லது காரை ஸ்டார்ட் செய்யவோ முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால் காரை நீங்கள் திறக்கும் பொழுது வெள்ள நீர் காருக்குள் இன்னும் அதிகமாக செல்ல வாய்ப்புள்ளது, மேலும் காரை ஸ்டார்ட் செய்யும் பொழுது பழுதடைந்து இருக்கும் இஞ்சின் மேலும் பழுதடைய வாய்ப்புள்ளது.
தண்ணீர் முழுவதும் வடிந்த பிறகு உங்களுக்கு அருகில் உள்ள மெக்கானிக் அல்லது உங்கள் கார் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு காரை நீங்கள் எடுத்துச் செல்வது மிகவும் நல்லது. ஆனால் இதற்கு முன்பாகவே வெள்ளத்தில் மூழ்கி இருந்த உங்கள் காரை எடுத்த போட்டோவை நீங்கள் அணுகும் மெக்கானிக் இருக்கும் அல்லது ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கும் காமிப்பது மிகவும் நல்லது அதோடு இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் இந்த போட்டோவை அனுப்பி எனது கார் சேதமடைந்து விட்டது என்ற தகவலை தெரிவிப்பது மிகவும் நல்லது. இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது மெயில் மூலமாகவோ இந்த தகவலை நீங்கள் தெரிவிப்பது உங்களது முதல் வேலையா இருக்கனும்!
இதற்குப் பிறகு வெல்லம் வடிந்த பின்பு வெள்ளத்தால் உங்களது கார் சேதமடைந்து இருந்தால் அது பற்றி காவல் நிலையத்திற்கு சென்று ஒரு புகார் அளிக்க வேண்டும் அந்த புகாரை போலீசாரம் ஏற்றுக் கொண்டு அதற்கான முதல் கட்ட விசாரணையை போலீசார் மேற்கொள்வார்கள் இந்த அவ்வையாரை வைத்து தான் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் காருக்கு ஏற்படும் சேதாரத்திற்கான பணத்தை வழங்கும். காவல் நிலையத்திலும் கார் குறித்த புகார் அளித்த பின்பு உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்களுக்கான உரிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்களது காரை ஸ்டார்ட் செய்யாமல் சர்வீஸ் சென்டருக்கு எடுத்து சென்று காருக்கு என்ன நேர்ந்தது என முழுமையாக ஆய்வு செய்து அதனையும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கலாம்.
இப்படி கார் உரிமையாளர் செய்வதன் மூலம் வெள்ளத்தால் காருக்கு ஏற்பட்ட சேதத்தை குறித்து சேதத்தை சரி செய்ய எவ்வளவு ஆகும் என்ற மதிப்பை இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து ஒருவர் நேரில் வந்து ஆய்வு செய்வார். அதே சமயத்தில் சேதமடைந்த கார் முழுவதும் சேரமடைந்துவிட்டது இனி சரி செய்ய முடியாது என்றால் அந்த கார் முழுவதையும் ஸ்கிராப் செய்துவிட்டு முழு இன்சூரன்ஸ் பணத்தையும் உங்களுக்கு இன்சுரன்ஸ் நிறுவனம் வழங்க முடிவு செய்யும், ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பணம் குறைவாக உள்ளது அல்லது உங்களுக்கு மன நிறைவாக இல்லை என்றால் அந்த நிறுவனத்தின் நீங்களே பேரம் பேசி அதிக தொகையை அதாவது உங்களுக்கு வேண்டுமென்ற தொகை பெற வாய்ப்புள்ளது. கடைசியாக இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கும் பணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்ட பிறகு உங்களுக்கு வழங்கப்படும்.