24 special

இப்படி ஒரு திறமையா? வியக்கவைக்கும் மாணவி....

Student,yamuna
Student,yamuna

தற்போது உள்ள காலங்களில் வித்தியாசமாக ஏதாவது ஒரு செயலினை செய்து அதன் மூலம் பாராட்டுகளை பெறுவது என்பது அனைவரின் மத்தியிலும் இயல்பான ஒரு விஷயமாகவே உள்ளது!! அதிலும் சிலர் மேலும் ஒரு படி சென்று சிறிது வேறுபட்ட செயல்களை வித்தியாசமாக செய்வதன் மூலம் கின்னஸ் சாதனை படைப்பது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. கின்னஸ் சாதனை என்பது உலக அளவில்  ஏதேனும் திறமை இருப்பின் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு அங்கீகாரம் ஆகும். இந்த சாதனை விளையாட்டு சம்பந்தப்பட்டதாகவும் மற்றும் பிற  வகையான செயல்பாடுகளில் இதுவரை யாரும் செய்யாத செயல்களை செய்து காட்டுவதோ அல்லது ஏற்கனவே செய்தவர்களை முறியடித்து  அவர்களை முந்தி காட்டுவது போன்ற செயல்கள் பாராட்டப்பட்டு கின்னஸ் சாதனை என்று அங்கீகரிக்கப்படுகிறது. 


கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஒவ்வொருவரும் அவர்களின் தனித்திறமையினால் அவற்றை வெளிக் கொண்டு வந்து இந்த புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர்!!! இதில் வயது வரம்பு எதுவும் கிடையாது என்பதினால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அசத்தி வருகின்றனர்!! இதைத்தொடர்ந்து மேலும் பல பிரபலங்களும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், பாடகர்கள்  மற்றும் இசையமைப்பாளர்கள் கூட கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளனர்.

சமீபத்தில் கூட ஆந்திராவை சேர்ந்த 4 மாத குழந்தை பழங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் என இரண்டு படங்களை வைத்து பெயரினை கூறினால் அதனை  சரியாக தேர்ந்தெடுக்கும் வகையில் 120 பொருட்களை  சரியாக தேர்ந்தெடுத்து  சாதனை படைத்துள்ளது!! இதனை பார்த்து இன்னும் பலர்  இது போன்ற சாதனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

 இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வரும் யமுனா என்பவர், ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுதிலிருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டு கற்றுக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது நன்றாக ஓவியம் வரையும் திறனை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரே ஏ4 தாளில், பென்சில் ரப்பர் எதுவும் பயன்படுத்தாமல் வெறும் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்தி  தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்ட 135 கோயில்களை வரைந்துள்ளார். ஒரே தாளில் வரைவது மிகவும் வியப்பாக உள்ளது. இதனை கண்ட அவரின் கல்லூரி நிர்வாகம் அவரை பெரிதும் பாராட்டி உள்ளது. 

மேலும் பொதுமக்கள் பலரும் அவர் வரைந்த ஓவியத்தை கண்டு எப்படி இவ்வாறு ஒரே தாளில் வரைய முடியும் என்று வியந்து, மேலும் யமுனாவின் திறமையை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்!!! இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!! அதில் இந்த வரைபடத்தை பற்றி யமுனாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது!!!

" சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் இருந்தது. அதன் பின் ஓவியம் வரைய கற்றுக் கொண்டேன். கடந்த ஒரு மாதமாக ஏ4 தாளில் தமிழகத்தில் உள்ள கோவில்களை பென்சில் ரப்பர் இல்லாமல் பேனாவை பயன்படுத்தி வரைய வேண்டும் என்று முயற்சித்தேன். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள 135 கோவில்களின் கோபுரங்களை ஒரே தாளில் வரைந்து உள்ளேன்!! மேலும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து இந்தியாவில் உள்ள கோவில்களில் 300 கோவில்களை ஒரே ஏ4 தாளில் வரைய பயிற்சி எடுத்து வருகிறேன். விரைவில் அதையும் சாதித்து காட்டுவேன்!!" என்று யமுனா கூறியுள்ளார். இவரின் செயல் இன்னும் பலரை சாதிக்க வேண்டும் என்று தூண்டி உள்ளது.