தற்போதைய சூழ்நிலையில் அரசியல் வட்டாரமும் சினிமா வட்டாரமும் பரபரப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளது! ஏனென்றால் அந்த அளவிற்கு போதைப் பொருள் கடத்தல் விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக போதை கடத்தல் கும்பலில் தலைவன் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் என் சி பி அதிகாரிகள் கைது செய்ததும் அவன் தற்போது என்சிபி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வாக்குமூலமாக பல உண்மைகளை கூறியுள்ளதாகவும் டெல்லி போலீஸ் வட்டாரத்தில் இருந்து பெறப்படும் தகவல்கள் கூறுகிறது. அதுமட்டுமின்றி போதை பொருளை கடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தை ரியல் தொழிலிலும் தமிழ் சினிமாவின் தயாரிப்பு பணியிலும் கொட்டி உள்ளேன் என்று ஜாபர் சாதி கூறியுள்ளது தான் தற்போது சினிமா வட்டாரம் பரபரப்பாக இருப்பதற்கு காரணம்! அதோடு ஜாபர் சாதிக்கு வீட்டில் சோதனை செய்த டெல்லி போலீஸ் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அடிக்கடி ஜாபர் வீட்டிற்கு வந்து சென்றதும் நிரூபணம் ஆகி உள்ளது.
இதனாலும் அரசியல் வட்டாரம் கதி கலங்கி போய் உள்ளது! முன்னதாக ஜாபர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார் என்பதும் அவரது சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜாபர் வீட்டில் என்சிபி அதிகாரிகள் சோதனை இட்டதில் பல போலி பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளனர் அந்த போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் ஜாபர் எந்தெந்த வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார் அவருடன் யார் சென்றார் என்ற முழு விவரங்களையும் சேகரித்து அவர்களையும் விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது. மேலும் ஜாபர் சமீபத்தில் கென்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் அங்கு அவருடன் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் சென்றுள்ளனர் என்பதும் என்சிபி அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு திமுகவின் அயலக பிரிவில் இருக்கும் பெரும்புள்ளிகள் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு வருவதும் வழக்கமாகத்தான் உள்ளது.
இப்படி திமுகவின் அயலக துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் போதை பொருட்களின் தலைவனாக இருந்துள்ளார் என்ற செய்தியே பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி உள்ள நிலையில் திமுகவின் அயலக பிரிவில் உள்ள பெரும்பாலானோர் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்ததும் ஜாபருடன் சென்று வந்ததும் தற்போது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளதால் அவர்கள் அங்கு சென்று என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பது குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலில் எழுந்துள்ள சந்தேகமும் கேள்விக்கும் பதில் அளிக்கும் வகையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளது தமிழக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது உண்மையை பேசினால் நிறைய வழக்குகள் வரத்தான் செய்கிறது அதேபோன்றுதான் எம் எம் அப்துல்லாவும் என் மீது வழக்கு தொடர உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் இன்னும் கொஞ்ச நாட்களில் அவரே ஜெயிலுக்கு போகப் போகிறார் என்று கூறியதற்கு தொகுப்பாளர் தரப்பில் என்ன காரணம் அப்படியா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு,, கென்னியாவிற்கு எதற்காக சென்றார்! வேறு எதற்காக அவர் கென்யாவிற்கு செல்ல வேண்டும் அங்கு சென்று திமுகவின் கிளையை உருவாக்கப் போகிறார்களா? போதைப்பொருள் கடத்தலுக்காக தான் கென்யாவிற்கு அவர்கள் நிச்சயம் சென்று இருக்க வேண்டும்.
உலக அளவில் கென்யா போதை பொருள் கடத்தலில் முக்கிய இடமாக கருதப்படுகிறது. அதனால் திமுகவிற்கு அங்கு என்ன வேலை இருக்கப் போகிறது கென்யா மட்டுமின்றி எத்தனையோ உலக நாடுகளுக்கு சென்றுள்ளது திமுக அயலக சென்றுள்ளது! ஐரோப்பிய சிறு சிறு நாடுகளுக்கு சென்றுள்ளது கிரீஸ் சென்றுள்ளது அங்கெல்லாம் சென்று திமுகவின் கிளை கழகத்தை தொடங்கினார்கள் என்று எனக்கு ஒரு ஆதாரம் காட்டுங்கள் போதும்! போதை பொருள் தான் இதற்காகத்தான் அவர்கள் அங்கு சென்று இருப்பார்கள் என்று நெத்தியடியில் போட்ட மாதிரி சவுக்கு சங்கர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது, இதனால் திமுக தலைமையையும் திமுகவின் அயலக அணியும் ஆடி போய் உள்ளதாக அறிவாலயத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.