
உலக வரைபடத்தில் இந்தியா என்பது வெறும் ஒரு தேசமல்ல, அது ஒரு விஸ்வரூபம் என்பதை இன்று ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் இந்தியா அஞ்சி நடுங்கும், எரிபொருள் இன்றி ஸ்தம்பிக்கும் என்று உலகத் தலைவர்கள் கணக்கு போட்டிருக்கலாம்.மேற்கு ஆசியா போர்க்களமாக மாறி எரிந்து கொண்டிருக்கும் போதும், ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் இந்தியா கொஞ்சம் கூட அஞ்சவில்லை. ஏனெனில், இங்கே இந்தியாவை வழிநடத்தத் தலைவராக நரேந்திர மோடியும், அவருக்கு நிழல்போலத் துணையாக நிற்கும் நவீன கால சாணக்கியரான அஜித் தோவலும், உலக அரங்கில் இந்தியாவின் சிம்மக்குரலாக ஒலிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இருக்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் புதிய உறவு என்பது வெறும் வணிக ஒப்பந்தம் மட்டுமல்ல; அது சர்வதேச அரசியலில் இந்தியா அடித்த ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. ஹார்முஸ் நீரிணையைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்டு புதிய வழித்தடம் மூலமாக இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இனி கச்சா எண்ணெய், அபுதாபியின் ஹப்ஷானிலிருந்து ஃபுஜைரா வழியாக அமைப்பட்டுள்ள 400 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய் வழியாக நேரடியாக இந்தியாவுக்குப் பாயும்.
மேலும், OPEC அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியதால், எண்ணெய் உற்பத்தி இனி கட்டுக்கடங்காமல் பெருகும். இந்த அதிநவீன எண்ணெய் குழாய் மூலம், நாளொன்றுக்கு 1.8 மில்லியன் பேரல்கள் வரை எண்ணெய் விநியோகிக்க முடியும் என்பது இந்தியாவின் வலிமையை இரட்டிப்பாக்கியுள்ளது. பொதுவாக எண்ணெய் வாங்க அமெரிக்க டாலர் தேவை. ஆனால், இந்தியா - அமீரகம் இடையே இப்போது தனிநபர் நாணய தீர்வு முறை (LCS) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா தனது 'ரூபாய்' மதிப்பிலேயே பணம் செலுத்தலாம். இது உலக பொருளாதார அரங்கில் இந்தியாவின் நாணய மதிப்பைக் கூட்டுவதோடு, அமெரிக்க டாலர் மீதான நம்முடைய சார்பைக் குறைக்கிறது.
இவையெல்லாம் ஏதோ தற்செயலாக நிகழ்ந்த மாற்றங்கள் அல்ல; இது மோடி - தோவல் - ஜெய்சங்கர் ஆகிய முப்பெரும் சக்திகளின் கூட்டணியால் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் வியூகம். பிரதமர் நரேந்திர மோடி அரபு நாடுகளுடன் முன்னெப்போதையும் விட வலிமையான நட்புறவை வளர்த்தெடுத்தார். அஜித் தோவல் எதிரி நாடுகளின் கணக்குகளைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் பாதுகாப்பு அரணை உருவாக்கினார். எஸ். ஜெய்சங்கர் உலக மேடைகளில் இந்தியாவின் நலன்களை எவ்வித சமரசமும் இன்றி கம்பீரமாக நிலைநாட்டினார். பாரதம் எதற்கும் அஞ்சாத, எதற்கும் கலங்காத ஒரு புதிய பாரதம். இது மூடப்பட்ட வாசல்களுக்கு முன்னால் முடங்கிப்போகாது; தனக்கான புதிய பாதைகளைத் தானே திறந்துக்கொண்டு வெற்றி நடை போடும். சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால், இன்னொரு நரேந்திர மோடி பிறந்தால் தான் உண்டு!
