
இன்று உள்ள இளைஞர்களின் மத்தியில் சரி எது தவறு எது என்ற புரிதலே இல்லாமல் அனைவரும் விளையாட்டுத்தனமாகவே உள்ளனர். ஏதாவது ஒரு அழகான விஷயங்களை பார்த்தாலோ அல்லது புதிதாக ஏதாவது ஒன்றை பார்த்தாலோ அதனை வாங்க முடிந்தால் வாங்கி விட வேண்டும் என்று துடிக்கின்றனர். அல்லது அதனுடன் சேர்ந்து ஏதாவது ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்கள் instagram facebook போன்ற அக்கவுண்டில் பதிவு செய்து அதன் மூலம் பல பாலோவர்ஸ்களை பெறுவது என்பது அவர்களின் ஒரு ஆசையாகவே உள்ளது.
சில விஷயங்களை இது சரிதானா இவ்வாறு செய்வது சரிப்பட்டு வருமா என்று ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அதனை செய்கின்றனர். இதிலும் சிலர் தங்களின் உயிர்களை பனையம் வைத்துக் கூட இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் ரயில் பாதைகளில் நின்று போட்டோஸ் வீடியோஸ் போன்றவற்றை எடுப்பது, ஓடும் ரயிலில் அல்லது பேருந்துகளில் தொங்கிக்கொண்டு வீடியோ எடுப்பது, ஆபத்தான இடங்களில் சென்று ரில்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது, வாகனங்களை ஓட்டிக்கொண்டே அதனை பார்த்து செல்பி எடுப்பது வீடியோக்கள் எடுத்து கெத்தான பாட்டு போட்டு அதனை இணையத்தில் பதிவிடுவது போன்று அனைத்து செயல்களிலும் எந்த ஒரு பயமும் இல்லாமல் எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என்று தெரியாமல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் எந்த ஒரு முன் யோசனையும் இல்லாமல் செய்யும் செயல் அவர்களின் உயிரை பறிக்கும் அளவிற்கு கூட பல நேரங்களில் ஆகிவிடுகிறது. இவ்வாறு செய்வதினால் சிலர் உயிருக்கு ஏதும் ஆகாவிட்டாலும், அவ்வாறு செய்ததற்கு பல சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவர்கள் மீது எடுக்கப்பட்டு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சீரழிந்து விடுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லி மெட்ரோ ரயிலில் ஹோலி கொண்டாடிய பெண்களின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! ஹோலி பண்டிகை என்பது கலர் பொடிகளை பூசிக்கொண்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதனை தற்போது பொது இடங்களில் செய்து வருவது ட்ரெண்டாகிவிட்டது. டெல்லி மெட்ரோ ரயிலில் கலர் பொடியை பூசிக்கொண்டு ஹிந்தி பாடலுக்கு ரொமான்டிக்காக ரியாக்சன் செய்து வீடியோக்கள் எடுத்து இரண்டு இளம் பெண்கள் இணையத்தில் பதிவிட்டு வந்ததாக செய்திகள் வெளியாகிறது.
இந்த இணையத்தில் பெருமளவு வைரலாகி வந்தது. பொது இடங்களில் இவ்வாறு கூட செய்கிறார்கள் என்று அதிக அளவு மக்கள் இவர்களின் மீது தங்களின் எதிர்ப்புகளை காட்டி வந்தனர். இந்த நிலையில் அது deep fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுத்த வீடியோவாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாக்கியது. இதில் உள்ள பெண்கள் யார் என்று தெரியவில்லை. இதனை பார்த்து பல இளைஞர்களும் தாமும் இந்த மாதிரி பொது இடங்களில் ரிலீஸ் செய்து பதிவிட்டால் நிறைய லைக்ஸ் கல் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.ஆனால் இவர்கள் செய்த காரியம் மிகவும் தவறானது என்று இணையத்தில் பல கமெண்ட்ஸ்கள் இழந்து வந்தது. இது குறித்து தற்போது பல விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. விரைவில் இது உண்மையான செய்தி தானா அல்லது Deep fake தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வெளிவந்த வீடியோ வா என்ற செய்தி கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இந்த இரு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.