
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரை காதலிப்பதாக பரவிய தகவல் குறித்து செய்தி தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வரும் நிலையில் அதற்கு சம்பந்தபட்ட சீரியல் நடிகை சொன்ன விஷயம் தான் இணையத்தில் ட்ரோல் ஆகி வருகிறது. தனியார் சேனலில் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் ஒன்றில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேஹா இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டிருந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் என்றும் இவரின் தந்தை மூலம் தான் இவர் சீரியலில் நுழைந்தார். தொடக்கத்தில் பள்ளி மாணவியாக இந்த சீரியலில் அறிமுகமான இவர்,. தற்போது கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து வருகிறார். திரைப்படங்களில் கூட நேகா நடித்து இருக்கிறார். அந்த வகையில் சிபிராஜ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை என்ற படத்தில் அவர் நடித்திருந்தார்.
இதனிடையே பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா குறித்த கிசுகிசு ஒன்று வைரலாக பரவியது. அது என்னவென்றால், அவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரனாவும் காதலித்து வருவதாக பேச்சு அடிபட்டது. இதற்கு காரணம் நேஹா தான். அவர் பதிரனா குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டதை பார்த்து இவர்கள் காதலிப்பதாக பேசத் தொடங்கினர். இதுகுறித்து நேஹாவும் அமைதி காத்தி வந்தார்.இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நேஹா, கிரிக்கெட் வீரர் பதிரனா உடனான காதல் வதந்தி குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் . “எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை. ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அருகில் இருந்தவர் சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தான் பதிரனா குறித்து தன்னிடம் தெரிவித்தார் என்றும் அவர் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை நானும் எனது ஸ்டோரியில் பதிவிட்டேன் அவ்வளவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.
நான் போட்ட அந்த பதிவுக்கு பின்னர் பதிரனாவை நான் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கின. அதைக் கேட்கும் போது எனக்கும் ஜாலியாக இருந்ததால் நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் உண்மையில் பதிரனாவை நான் நேரில் கூட பார்த்தது இல்லை என்றும் . நிஜ வாழ்க்கையில் நான் ஒருமுறை மட்டும் காதல் தோல்வியை சந்தித்து அதனால் மன கஷ்டங்கள் ஏற்பட்டு நிறைய அழுது தீர்த்து விட்டேன். மீண்டும் இதுபோன்ற தவறை நான் செய்யமாட்டேன் என்றும் நேகா ஓபனாக பதிரனா குறித்தும் தான் காதலிக்கப்பதாக வந்த தகவல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். ஒருவிழியாக இணையத்தில் நேகா குறித்து சர்ச்சை வெளிவந்த நிலையில், அவரே அதற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்...