24 special

"அண்ணாமலை" வெளியிட்ட சிதம்பரம் ரகசியம் இதுதானா?

Annamalai
Annamalai

ஒரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்றால் மக்கள் மனதில் கவனம்பெறும் வகையில், மற்றொரு சம்பவத்தை முன்னிறுத்த வேண்டும் என்பது ஊடகங்கள் மற்றும் அரசியலில் எழுத படாத விதி அந்த வகையில் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஊடக வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது, அது குறித்தும் சிதம்பரம் நடராஜர் புகைப்படத்தை அண்ணாமலை பகிர்ந்து சொன்ன குறியீடு என்ன என்பது குறித்தும் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு மற்றும் சில ஆவணங்களை வெளியிட்டார், இந்த சூழலில் அண்ணாமலை அமைச்சர்கள் மீது வைத்த குற்றசாட்டை தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் ஏதும் நேரடியாக முழுமையாக லைவ் ஒளிபரப்பு செய்யவில்லை, அண்ணாமலை ஆவணங்களை வெளியிட இருக்கும் தேதியை முன் கூட்டியே சொல்லி இருந்தார்.

அந்த வகையில் அண்ணாமலையின் குறிப்பிட்ட செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பு செய்ய கூடாது என பெரும்பாலான ஊடகங்களுக்கு  உத்தரவு சென்று இருக்கிறது, இது தவிர பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக சார்பில் நடைபெறும் ஊடகமும் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பு செய்யவில்லை.

இதன் பின்னணி படு சுவாரஸ்யமாக இருக்கிறது, வழக்கமாக அதிமுக அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை தங்களுக்கு சாதகமாக நினைத்து கொண்டு இருந்தது, திமுகவிற்கு எதிரான பாஜகவின் குற்றசாட்டு நிச்சயம் பாஜகவிற்கு சாதகமாக மாறுகிறதோ இல்லையோ அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என கணக்கிட்டு இருந்து இருக்கிறது அதிமுகவின் கொங்கு தலைமை.

ஆனால் களத்தில் நடந்ததோ வேறு, திமுகவின் நேரடி கள எதிரியாக பாஜக மாறி வருவது அண்ணாமலையின் அடுத்தடுத்த மாநில சுற்று பயணம் மூலம் தெளிவாக அதிமுகவிற்கு உணர்த்தியுள்ளது, போதாத குறைக்கு எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைய இருக்கிறார்களாம்.

இது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்க அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து பேச வைத்து இருக்கிறார்கள், இப்படி அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது வைத்த குற்றசாட்டு மக்கள் மனதில் செல்லாமல் இருக்க அதிமுக மற்றும் திமுக இரண்டும் கூட்டணி போட்டு வேலை செய்து இருக்கின்றன.

இது ஒரு புறம் என்றால் மாநில அமைச்சர்கள் இப்போது முதல்வருக்கு எந்த அளவு பயம் கொண்டு இருக்கிறார்களோ அதே அளவு அண்ணாமலை மீதும் கடுமையாக பயத்தில் இருக்கிறார்களாம், மொத்தமாக சொல்லு வேண்டும் என்றால் நாளுக்கு நாள் திமுக அமைச்சர்கள் ஒருவர் கூட அண்ணாமலை பெயரை உச்சரிக்காமல் இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார் அருகில் தயாநிதி மாறன் மற்றும் சென்னை மேயர் ஆகியோர் உடன் இருந்தனர், அப்போது மதுரை ஆதீனத்தை எச்சரிக்கும் வகையில் பழைய சேகர் பாபு வை பார்க்க வேண்டுமா? என எச்சரிக்கை கொடுத்தார்.

அதோடு கோவில் மடாதிபதிகள், சிவாலயங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக சேகர் பாபு மீது குற்றசாட்டு எழுந்து இருக்கிறது, இதனை பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில்தான் அண்ணாமலை நேற்று அவரது சமூக வலைத்தள பக்கங்களில் சிதம்பரம் நடராஜர் காலில் அரக்கரை வதம் செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார், இதன் மூலம் அவர் சொல்ல வருவது விரைவில் அமைச்சர் சேகர் பாபுவிற்கு ஏதேனும் ஒரு வலையில் ஆப்பு வைக்க தயாராகி இருப்பதாகவும் அண்ணாமலை வெளியிடும் அடுத்த லிஸ்ட் வெறும் காகித ஆதாரங்களுடன் இல்லாமல், ஆடியோ வீடியோ வகையில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.