24 special

பட்டியலின பெண் பதவியேற்க முடியாமல் இருப்பது தான்... சனாதன எதிர்ப்பா?

mk stalin, bala krishnan
mk stalin, bala krishnan

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஜாதிகள், தீண்டாமை வன் கொடுமை இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்று ஆளுநர் ஆர்.என் ரவி கூறியிருந்தார். அப்படி இருக்க கடந்த மாதம் சனாதனதிற்கு எதிராக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அப்போது சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க பட வேண்டும் என பேசியது நாடு முழுவதும் திமுக அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பட்டியலின பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்க முடியாமல் இருப்பது கவலையளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேசியிருப்பது கூட்டணி கட்சியான திமுகவிற்கு அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பாஜக- அதிமுக கூட்டணி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் முறித்து கொண்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இரு கட்சிகளும் சென்ற நிலையில்.


விசிக கட்சி தலைவர் தோல் திருமாவளவன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது, அரசியில் வட்டாரத்தில் விசிக- அதிமுகவுடன் கூட்டணி வைக்க போகிறது என பேச்சு எழுந்தது. எப்போதும் சமூக நீதிக்கு ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தற்போது, 'திருப்பத்துார் மாவட்டம், நாயக்கநேரி கிராம பஞ்சாயத்து தலைவராக, 2021 செப்டம்பரில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துமதி. 'அவருக்கு உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்' என, கடந்த 26ம் தேதி, தலைமைச் செயலருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக இதை பற்றி பேசாமல் இப்போது எதற்காக பேசுகிறார்? ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் சனாதனதை பற்றி பேசியதால், பாலகிருஷ்ணன் தங்களது ஆட்சியில் சாதி பாகுபாடு இருக்கிறதை சுட்டி காட்டுகிறாரோ?.

இதனால் திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியில் வரப்போகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னதாக விசிக, இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியா.. இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுகிறதா? என்ற சந்தேகம் தொடங்கியுள்ளது. மேலும், வரும் தேர்தலில் மூன்று தொகுதிகளை கேட்க உள்ளதாம் மார்க்சிஸ்ட் கட்சி. அதனாலதான்  திமுக மீது நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.ஆளுநர் ரவி கடந்த மாதம் 29ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது: இந்துமதி என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்பதில் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த பெண்ணிற்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது. பின்தங்கிய வகுப்பினரை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்” எனத் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த பெண்ணிற்கு பதவி வழங்குவதை தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வருகிறது. இவர்கள்தான் சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என தங்களைப் பற்றி பரப்புரை செய்து வருகின்றனர். சமூக நீதியை காப்பதாக கூறி சமூகத்தில் விஷத்தை பரப்புகிறார்கள்.மேலும் சனாதன ஒழிப்பை கையில் எடுத்திருக்கின்றனர் என திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.